கொழும்பு: பொது மக்களுக்கும் மீனவர்களுக்கும் துல்லியமாக வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்காக டொக்ளர் ராடார் முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக, கடந்த காலங்களில் ஏற்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்திக்க முடிவுமென எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வளிமண்டல திணைக்களம் வெளியிடும் வானிலை எதிர்வுகூறல்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,
துல்லியமான எதிர்வு கூறல்கள் வழங்குவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. உலக மற்றும் வலய மற்றும் உள்நாட்டு தரவுகளையும் அடிப்படையாக கொண்டு வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எதிர்பு கூறல்கள் எப்பொழுதும் நூறு வீதம் நடப்பதில்லை 85 வீதமான எதிர்வு கூறல்களே உண்மையாகின்றன.
தவறாகும் 15 வீத எதிர்வு கூறல்கள் தொடர்பிலே அதிகமாக பேசப்படுகிறது. வானிலை அவதான நிலையத்தை மேலும் மேம்படுத்தி அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராடார் முறை நிறுவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. சீரற்ற காலநிலையினால் அந்த நடவடிக்கைகள் தாமதமாகியது.
விரைவில் அந்த பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.
– தினகரன்
Leave a comment