Author: yourkattankudy.com
-
இலங்கை வீரர்கள், மீட்புப் பணியாளர்களுடன் விமானம் கத்மண்டுவில் தரையிறக்கம்
கொழும்பு: நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய முதலாவது குழு நிவாரணப் பொருட்களுடன் நேற்றுக்காலை நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவை சென்றடைந்துள்ளது.
-
நேபாளத்தை விட்டு வெளியேற முடியாமல் பல்லாயிரம் பேர் தவிப்பு
கட்மாண்டு: தொடர் நிலநடுக்கத்தினால் நிலைகுலைந்திருக்கும் நேபாளத்தின் தலைநகர் கட்மாண்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மின்விநியோகம் முற்றாக நிலைகுலைந்திருப்பதாகவும் தகவல் தொடர்பு கட்டமைப்பும் பெருமளவு செயற்படவில்லை என்றும் தெரிவிக்கிறார் நேபாளத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலர் கண்ணன்.
-
நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் உள்ள நாடு நேபாளம்
ஒக்ஸ்ஃபோர்ட்: நேபாளம் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பிராந்தியத்தில் இருக்கும் ஒரு நாடு. பூமியின் ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நிலத்தின் மேலடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகும்போது நிலநடுக்கம் ஏற்படுகின்றது.
-
வடக்கில் பறிபோகும் முஸ்லிம் பதவியும், மௌனிக்கும் முஸ்லிம் காங்கிரசும்: ஒரு பார்வை
– வன்னிக் குரலான் வன்னி: இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் சகல உரிமைகளும் வசதிகளும் பெற்று வாழ வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமைான முடிவுடன் இருப்பது காலத்தின் தேவையாகும்.இந்த தேவையில் ஏற்படும் சருக்கல்களினால் ஒரு சமூகமே தமது அடையாளத்தை இழக்கும் நிலை தற்போது வடக்கில் ஏற்பட்டுள்ளது.
-
“சிலை வணக்கத்திற்கான ஆரம்பம் நினைவுச் சின்னங்களாக அவற்றை நிறுவுவதுதான்”: காத்தான்குடியில் கோவை எஸ். ஐயூப் தெரிவிப்பு
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள் பின்னொரு காலத்தில் வணங்கப்படத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
-
காத்தான்குடி மருத்துவர்கள் அமையமும் அதன் எதிர்கால செயற்திட்டங்களும்
– டாக்டர்; I.L. முஹம்மத் றிபாஸ் காத்தான்குடி: மருத்துவத் துறை உன்னதமானது அந்த சேவையினை மக்களுக்கு வழங்குகின்ற மருத்துவர்களும் சமுகத்தால் உயர்வாக மதிக்கப் படுகின்றனர். இது காலாதிகாலமாக நிகழ்கிறது. மனிதர்களின் வலியை, வேதனையை, பயத்தை, சோகத்தை சந்தேகங்களை போக்குவதற்கான ஒரு வாய்ப்பை மருத்துவர்கள் பெறுகின்றனர். இவ்வாறு மனிதத்தின் விரும்பப் படாத பக்கத்தினை இவர்கள் கையாள்கின்றனர்.
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் தினம் வெகுபிரமாதம்!
– தர்மன் பேராதனை: பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் தினம் – 2015 அண்மையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது. சமூக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சமூகவியல் என்கிற மகுட வாசகத்துடன் இம்முறை இத்தினம் கொண்டாடப்பட்டது.
-
முல்லைத்தீவு மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுடனான சந்திப்பு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் முல்லைத்தீவு: மாவட்டத்தின் எதிர்காலம் அபிவிருத்தி தொடர்பில் அதிகம் பொறுப்புள்ளவர்கள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தியாக மனதுடன் செயற்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பொறுப்புக் கூறல் மிகவும் பாரதுாரமானது என்றும் கூறினார்.
-
வவுனியா மாவட்ட தமிழ் கிராமங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: இந்த நாட்டில் மீண்டும் இனவாத சிந்தனைகளை விதைத்து அதன் மூலம் மனித அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியினை மீண்டும் வெகு விரைவில் கூறுவார்கள் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இனவாதம், மதவாதம், பிரதேசவாதங்கள் எமது முன்னேற்றத்தின் தடைக்கற்கல் என்றும் சொன்னார்.
-
‘அகர ஆயுதம்’ அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஒலுவில்: ‘அகர ஆயுதம்’ அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு நேற்று தென்கிழக்கு பல்கலைக் கழக கலை கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது.
-
“சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளேன்”: ஜனாதிபதி மைத்திரி
காலி: தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! – பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
கட்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.