Author: yourkattankudy.com
-
சபையில் சிலருக்கு வயிற்றோட்டமாம்: பிரதமர் ரணில்
கொழும்பு: பங்குச் சந்தை நிதி புரள்வு மோசடிகள் உட்பட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தவுடன் இன்று ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்து விட்டது என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
-
19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது
கொழும்பு: 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டதோடு 7 பேர் இன்று சமூகமளிக்கவில்லை. மேலும் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
-
தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 8 இஸ்லாமிய பிரச்சார மாநாடுகள்: பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் விஷேட உரை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 8 இஸ்லாமிய பிரச்சார மாநாடுகள் கடந்த 22ம் திகதி புதன்கிழமை தொடக்கம் நேற்று திங்கட்கிழமை 27ம் திகதி வரை காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பூநொச்சிமுனை, பாலமுனை, காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெற்றது.
-
அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு அவசியமான தகைமைகள் யாவை? மூதூர் பீஸ் ஹோம் கருத்துக் கணிப்பு
மூதூர் முறாசில் மூதூர்: மூதூர் பீஸ் ஹோம் அமைப்பானது பிரதேச சபையை மையப்படுத்தி அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு அவசியமான தகைமைகள் எவையென நூறு முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்து கேட்டது. இதன்போது அவர்களில் 99 வீதமானோர், தாம் புரியும் பணிக்கு அல்லாஹ்விடம் மட்டும் கூலியை எதிர்பார்க்கும் உளத் தகுதியே அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு இருத்தல் வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
-
நிலநடுக்கத்தால் 10 அடி நகர்ந்தது கத்மாண்டு!!
– AF-90 கத்மாண்டு: நேபாளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் தலைநகர் கத்மாண்டு தெற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்துள்ளது. அதேசமயம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இமயத்தின் தொட்டிலாக விளங்கும் நேபாள நாட்டை சீர்குலைத்துப் போட்டுள்ளது நிலநடுக்கத்தால் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.
-
“வெள்ளை வேன்” இரகசியக அறிக்கை
கொழும்பு: கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பு செயற்பட்டாளர்கள் கடத்தி காணாமல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ‘வெள்ளை வேன்’ கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு துறைசார் பிரதானிகள் மூவர் பற்றிய இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
-
சிரேஷ்ட கல்விமான் ஜமீலின் மறைவுக்கு வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு அனுதாபம்
மன்னார்: சிரேஷ்ட கல்விமானும் சமூக ஆர்வலரும் புகழ்பூத்த எழுத்தாளருமான மர்கூம் எஸ்.எச்.எம். ஜமீலின் மறைவுக்கு வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு தனது ஆழ்ந்த அனுதாபாங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கிறது. வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது,
-
தாருல் அதர் அமைப்பின் ஏற்பாட்டில் பாலமுனையில் இடம்பெற்ற தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர்கள் கலந்து கொண்ட இஸ்லாமிய பிரச்சார மாநாடு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய பிரச்சார மாநாடு ஒன்று 27 நேற்று திங்கட்கிழமை பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளிவாயல் அருகாமையில் இடம்பெற்றது. இதன் போது பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோரினால் ‘இறைவனின் இறுதிக்கட்ட விசாரணை’, ‘ஈமானின் உறுதி’ என்ற தலைப்புக்களில் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
-
வன்னி மாவட்ட விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சர் றிசாத் வேண்டுகோள்
– இர்ஷாத் ரஹ்மதுல்லா வன்னி: மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் நிதி அமைச்சர் ரவி கருநாயக்கவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
அன்னாருடைய இழப்பில் நாங்களும் தவிக்கின்றோம்
கல்முனை: எஸ்.எச்.எம்.ஜெமீல் sir அவர்கள் எனது ஆசான் மரணித்த செய்தி அதிகாலையிலேயே எட்டிய போது நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். அவர்களின் அரிதான ஏடுகளையும், கையெழுத்துச் சுவடிகளையும், அச்சியற்றப்பட்ட பிரதிகளையும் தேடி, அவற்றிலிருந்து உரிய தகவல்களை திரட்டுவதற்காக தாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் சொன்னார். அவருடை Zahira College அதிபர் காலம் ஒரு பொட் காலம் என வரனிக்கலம், அனைத்து அரசியல் சொந்தங்களையும் அரவணைத்து செல்கின்றவர்.
-
‘மரணத்திற்கு பின் மனிதன்’ (ஜித்தா சிறப்பு மாநாடு)- காணொளி
வழங்குபவர்: மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி, அழைப்பாளர், UAE இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, 17-04-2015 – நன்றி: சுவனப்பாதை
-
“உண்மையான ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த 19வது திருத்தம் வழிவகுக்கும்”: ஜனாதிபதி
கொழும்பு: 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தைப் பெற சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.