முல்லைத்தீவு மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுடனான சந்திப்பு

SAMSUNG CAMERA PICTURESஇர்சாத் ரஹ்மத்துல்லாஹ்

முல்லைத்தீவு: மாவட்டத்தின் எதிர்காலம் அபிவிருத்தி தொடர்பில் அதிகம் பொறுப்புள்ளவர்கள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தியாக மனதுடன் செயற்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பொறுப்புக் கூறல் மிகவும் பாரதுாரமானது என்றும் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று முல்லைத்தீவில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விஜின்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன், மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவர் எம்.அமீன், அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் ஷரீப் ஆகியோரும இதன் போது சமூகமளித்திருந்தனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில்,

வடக்கில் யுத்த காலத்தின் பின்னர் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு சென்றுள்ளது. நான் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து அதனை செய்துவருகின்றேன். ஒரு காலம் இருந்தது தொழில்களை பெறுவதறகு ஏஜெண்டுகளுக்கு பல இலட்சம் ரூபாய்கள் பணம் கொடுத்து அதனை அடைந்து கொள்ள, இந்த நிலையினை நாம் மாற்றினோம். தகுதி அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எவரும் மோசடி செய்யவில்லை. ஆனால் சிலர் இன்று இந்த நியமனங்கள் தொடர்பில் போலி குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர்.

எமது இணைப்பாளர்கள், செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளேன். எம்மை நாடி வருகின்ற மக்களின் தேவைகளை எவ்வித பிரதி லாபங்களையும் எதிர்ப்பார்க்காமல் பணியாற்ற வேண்டும் என்று. ஏன் இவ்வாறு நாம் செய்கின்றோம் என்றால், இந்த மக்கள் எமக்கு வாக்களித்து அரசியல் அந்தஸ்த்தை தந்தார்கள் என்ற நன்றி எம்மில் இருக்கின்றது.

எனது அரசியல் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் பங்களித்தவர்களுக்கு நான் எனது பணியினை செய்வேன். அது தான் அவர்களுக்கு நான் செய்யும் கைங்கரியமாகும். நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது தகுதியுடைய அவர்களை நான் சிபாரிசு செய்வது எனது கடமையாகும். இன்று எனக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட கதைகளை கூறிவருகின்றனர். மத, இன ரீதியாக இவர்கள் பேசுகின்றனர். எம்மல் கல்லங்கபடத்தனம் இருந்தால் இவ்வாறு எல்லா சமூகங்களையும் ஒரே இடத்தில் வைத்து பேச முடியுமா? இன ரீதியாக சிந்திக்கின்ற கட்சிகள் தமது இனத்தை சார்ந்தவர்களை மட்டும் அழைத்து திட்டங்களை தீட்டுவார்கள்.

எமது கட்சி தான் சகல சமூகங்களையும் திறந்த உள்ளத்துடன்  அனுகிவருகின்றது. ஒப்பீட்டளவில் வன்னியில் உள்ள அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை  பார்க்கின்ற போது பிரதேச, நகர, மாகாண சபைகளின் பிரதி நிதித்துவத்தை எடுத்துக் கொண்டால் சிங்கள, தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள’ எமது கட்சியில் இருந்து தான் வந்திருக்கின்றார்கள். அப்படியெனில் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மீது இன ரீதியான சாயத்தை பூச முடியும் என அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

அரசாங்கத்தின் அபிவிருத்திகளை இந்த மக்களுக்கு கொண்டு செல்லும் பணியினை சமூர்த்தி அதிகாரிகள் செய்கின்றனர். கடந்த 4 வருடங்களாக நாங்கள் செய்துள்ள அபிவிருத்திகளை நீங்கள் மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். இந்த அபிவிருத்தி பணிகளை நாம் தேர்தல் நோக்கம் கொண்டு செய்யவில்லை மாறாக மனிதாபிமானத்துடனேயே அதனை நாங்கள் செய்கின்றோம்.

இந்த வன்னி மாவட்ட மக்கள் எமக்கு வழங்கிய வாக்குகளினால் ஒரு கட்சியினை உருவாக்க முடிந்தது. அந்தக் கட்சிக்கான தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். இதன் மூலம் வன்னி மாவட்ட மக்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளை சர்வதேசத்திடமும், ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திடமும் இருந்து  என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Published by

Leave a comment