இலங்கை வீரர்கள், மீட்புப் பணியாளர்களுடன் விமானம் கத்மண்டுவில் தரையிறக்கம்

to nepal helpகொழும்பு: நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய முதலாவது குழு நிவாரணப் பொருட்களுடன் நேற்றுக்காலை நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவை சென்றடைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற விமானப் படைக்குச் சொந்தமான சி – 130 ரக விமானம் காலை 10.30 மணியளவில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு சென்றடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

to nepal help

Published by

Leave a comment