வன்னி: இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் சகல உரிமைகளும் வசதிகளும் பெற்று வாழ வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமைான முடிவுடன் இருப்பது காலத்தின் தேவையாகும்.இந்த தேவையில் ஏற்படும் சருக்கல்களினால் ஒரு சமூகமே தமது அடையாளத்தை இழக்கும் நிலை தற்போது வடக்கில் ஏற்பட்டுள்ளது.
வடமாகாணம் என்பது தமிழ் பேசும் முஸ்லிம்,தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசமாகும்.இதனை ஒரு தனிச்சமூகம் உரிமைக் கோரமுடியாது.அவ்வாறு உரிமைக் கோறியதினால் ஏற்பட்ட இழப்புக்கள் இன்னும் அழியாத வடுக்கல் என்பதை வரலாற்று பதிவில் இருந்து நாம் கற்றுக் கொண்ட உண்மையாகும். இந்த நிலையில் இன்று வடக்கில் சிறுபான்மை சமூகமாக வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை (தமிழ்)சமூகத்தின் பிரதி நிதித்துவத்தால் முன்னெடுக்கப்படும் களுத்தறுப்புக்களும்,அளுத்தங்களும் எல்லை கடந்து போயுள்ளது.
அன்று ஆட்சியில் இருந்த மஹிந்த அரசாங்கத்தில் வடமகாண விவசாய,காணி அமைச்சின் செயலாளராக மர்ஹூம் அல்-ஹாஜ் ஹாலிதீன் அவர்கள் இருந்தார்கள்,அதன் பின்னர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை ஆட்சியில் முஸ்லிம் ஒருவருக்கு அவ்வாறானதொரு உயர் பதவி வழங்கப்படவில்லை.எத்தனையோபேர்கள் இந்த பதவிக்கு தகுதி இருந்தும் அவர்கள் புறக்கணிப்பு
செய்யப்பட்டதன் பின்னணி வடக்கில் முஸ்லிம்களுக்கு இன்மேலும் இடமில்லை என்ற செய்தியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்லிவிட்டதாக பார்க்கமுடிகின்றது.
அதே போல் வடக்கில் வடக்கினை பிறப்பிடமாகாக் கொண்ட ஒரு முஸ்லிம் உயர் பதவியில் இருந்தால் அவரை அந்த பதவியில் இருந்து துடைத்தெறிவது தான் தார்மீகக் கடமை என தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை ரீதியாக எடுத்துள்ள சத்தியப்பிரமாணத்தின் அடுத்த தாக்குதல் தான் வடமாகாண போக்குவரத்து
சபையின் பிராந்திய பொது முகாமையாளராக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் எம்.அஸ்கருக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட கடையடைப்பாகும்.தேசிய மட்டத்தில் இந்த பதவிக்கு பலர் போட்டியிட்டனர்.
புள்ளிகளின் அடிப்படையில் அஸ்கர் தெரிவு செய்யப்பட்டார். இதற்கு முன்னர் எம்.அஸ்கர் மன்னார் பேருந்து சாலையின் முகாமையாளராக பணியாற்றியவர்.இவர் சிற்நத அனுபவமும் செயற் திறமையும் கொண்ட ஒர் அதிகாரி என பலராலும் பாராட்டைப் பெற்றவர்.இவர் பிராந்திய முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்ற போது பல இலட்சம் ரூபாய்கள் நிலுவையினை கொண்டதாக வடபிராந்திய போக்குவரத்து சபை காணப்பட்டது.தமது அயராத உழைப்பும்,அதிகாரிகளின் மனதினை வெல்லக் கூடிய வலிமையும் கொண்ட அஸ்கர் 2012 அம் ஆண்டு இந்த நிலுவையினை செலுத்தி இலங்கையில் உள்ள பேருந்து
சாலைகளில் சிறந்த முதற் தர பேரூந்து சாலையாக வட பிராந்தியத்தினை நாட்டுக்கு காட்டினார்.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக வடமாகாண சபையும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவர் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.
கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிரதமரிடம் இவரை பதவி விலக்க வேண்டும்,இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருக்கின்றது என்று அளுத்தங்களை கொடுத்து வடபிராந்தியத்திய போக்குவரத்து பிராந்திய முகாமையாளர் பதவியிலிருந்து இவர் அகற்றப்பட்டார்.
இந்த நாட்டிலும்,சர்வதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் பலர் குரல் கொடுக்கின்றனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு அரசுக்கும்,முஸ்லிம் எதிர் கடும்போக்கு இனவாதிகளுக்கும் எதிராக,ஆனால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான சமத்துவப் பங்கை அதனது வகிப்பகத்தை அடைந்து கொள்ளவிடாது தடுக்கும்
இவ்வாறான இனவாத கட்சிகளுக்கு எதிராக நியாயத்துக்காக குரல் கொடுக்க ஏன் இந்த கட்சிகள் முன்வராத நிலை காணப்படுகின்றது.முஸ்லிம்களுக்காக பேசுவதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் பேசாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமது சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்படுகின்றது என்பது தெரிந்தும் அதற்காக தம்மை முன்னிறுத்த வேண்டிய கட்சி மௌனிப்பது எதற்காக ? வடக்கில் பிறந்த
ஒரு மகன் இந்த வடக்கில் உயர் பதவி ஒன்றில் இருக்க முடியாது என்றால்,அதற்கான போராட்டங்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டியது யார் முஸ்லிம்கள் என எம்மை அடையாளப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் அதனை செய்யத் தவறுகின்ற போது அந்த பழிச் சொல்லும்,இலிச் சொல்லும் நிச்சயமாக எம்மை
வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை.
நிராதிபராதி தண்டிக்கப்படுவதும்,குற்றவாளி நிரபராதியாகுவதும் உலக நடப்பில் சாரதாரணமாக இருக்கலாம்.ஆனால் இந்த உண்மையான நிரபராதியின் மன நிலையின் பின்னணி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மௌனித்து பயணிக்கும் எனில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் உயர் பதவியில் வகிப்பது
என்பது எட்டாக்கணியாகவே இருக்கும் என்பது யதார்த்தமாகும்.
வடக்கினை பொறுத்தவரை யாழ்,கிளிநொச்சி,முல்லை,வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள உணர் பதவிகளில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கின்றனர்.அது எத்தனை விகிதம் என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு தேசிய அரசியல் செய்யும் முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன் ஆகியோரது பொறுப்பு என்பதை வலியுறுத்தும்,அதே வேளை வட பிராந்திய பேரூந்து
முகாமையாளர் அஸ்கர் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு செலுத்தும் குற்றச்சாட்டு உண்மைக்கு முழுமையாக மாறுபட்டதொன்று என்பதனையும் இது வடக்கில் முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை அழிக்கும் ஒன்றாகும் என்பதை இந்த தலைமைகள் புரிந்து கொண்டு நியாயத்துக்காக அரசாங்கத்திடம் போராட
வேண்டும,அப்போது தான் எமது வாழ்வுரிமை வடக்கில் உறுதிப்படுத்தப்படும். ஏற்கனவே வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்.
அவர்கள் மீள குடியேற வந்த போதும் அதற்கு இந்த தமிழ் ஆதசிய கூட்டமைப்பு தடைகளை ஏற்படுத்திவருகின்ற நிலையில்,அதனது தொடராக இன்று திங்கட்கிழமை மீண்டும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய முகாமையாளரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்கவுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மௌனம் கலைந்து உரிமைக்குரல் ஒலிக்க தயாராக வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து
நிற்கின்றது.


Leave a comment