காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 8 இஸ்லாமிய பிரச்சார மாநாடுகள் கடந்த 22ம் திகதி புதன்கிழமை தொடக்கம் நேற்று திங்கட்கிழமை 27ம் திகதி வரை காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பூநொச்சிமுனை, பாலமுனை, காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெற்றது.
இம் மாநாடுகளில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோரினால் பில்லி சூனியம், நாம் யாரை பின்பற்ற வேண்டும், றமழான் கால வணக்கங்கள், இறை விசுவாசிகளின் பண்புகள், நாம் சொல்வதென்ன, போதை பொருள் பாவனையும் சீரழியும் முஸ்லிம் சமூகமும் போன்ற பல்வேறு தலைப்புக்களில் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.மேற்படி இஸ்லாமிய பிரச்சார மாநாடுகளில் உலமாக்கள், பெரும் திரளான ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த மாநாடுகள் கடந்த 22ம் திகதி புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திலும், 23ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும், 23ம் திகதி வியாழக்கிழமை பூநொச்சிமுனை கடற்கரையிலும், 24ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரையிலும், 25ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலிலும், 25ம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்திலும், 26ம் திகதி காத்தான்குடி-06 பஸ்மலா சதுக்கத்திலும், 27ம் திகதி பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளி அருகிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment