நிலநடுக்கத்தால் 10 அடி நகர்ந்தது கத்மாண்டு!!

land nepal earth quake– AF-90

கத்மாண்டு: நேபாளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் தலைநகர் கத்மாண்டு தெற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்துள்ளது. அதேசமயம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இமயத்தின் தொட்டிலாக விளங்கும் நேபாள நாட்டை சீர்குலைத்துப் போட்டுள்ளது நிலநடுக்கத்தால் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.

பல புராதணச் சின்னங்கள், பழமையான கட்டடங்கள் என அழிவடைந்துள்ளன.

இந்நிலையில், நேபாள நிலநடுக்கம் காரணமாக தலைநகர் கத்மாண்டு, தெற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்துள்ளதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

land nepal earth quake

இருப்பினும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அது அப்படியே இருப்பதாகவும் வல்லுனர்கள் மேலும் கூறியுள்ளனர்.

earthquake nepal

Published by

Leave a comment