அன்னாருடைய இழப்பில் நாங்களும் தவிக்கின்றோம்

jameelகல்முனை: எஸ்.எச்.எம்.ஜெமீல் sir அவர்கள் எனது ஆசான் மரணித்த செய்தி அதிகாலையிலேயே எட்டிய போது நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். அவர்களின் அரிதான ஏடுகளையும், கையெழுத்துச் சுவடிகளையும், அச்சியற்றப்பட்ட பிரதிகளையும் தேடி, அவற்றிலிருந்து உரிய தகவல்களை திரட்டுவதற்காக தாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் சொன்னார். அவருடை Zahira College அதிபர் காலம் ஒரு பொட் காலம் என வரனிக்கலம், அனைத்து அரசியல் சொந்தங்களையும் அரவணைத்து செல்கின்றவர்.

எஸ்.எச்.எம்.ஜெமீல் sir அவரது அயராத முயற்சியால் உருவான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கும் அன்னார் தாம் சேகரித்து வைத்திருந்த ஏராளமான நூல்களை அன்பளிப்புச் செய்திருந்தார்.

கல்வியியலாளராக, இலக்கிய விற்பன்னராக, ஆய்வாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக, அமைச்சுச் செயலாளராக, பல்கலைக்கழக பதிவாளராக மற்றும் பல்வேறு பரிமாணங்களின் அவரது பங்களிப்பு நோக்கப்படுகின்றது. தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதுவதிலும், பேசுவதிலும் அவர் வல்லவர். அவரது திறமைக்குச் சான்றாக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

எஸ்.எச்.எம்.ஜெமீல் sir எப்பொழுதும் புன்முறுவல் பூத்தவராகவும், இனிமையாக பழகுபவராவும், இறையச்சம் உள்ளவராகவும் இருந்தார்.

இலங்கையின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவரும், கடல்கடந்த நாடுகளில் கூட நன்கறியப்பட்ட இலக்கிய ஆய்வாளருமான இனிய எஸ்.எச்.எம். ஜெமீல் sir அவர்களின் மறைவு இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளது. அவரது இலக்கியத் தேடுதல் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருவாயில் அல்லாஹ்வின் நாட்டப்படி அன்னார் இவ்வுலக வாழ்வை நீத்து, நிலையான மறுமை வாழ்வுக்கு பயணித்துள்ளார்,

அன்னாரது பிரிவினால் துயருறும் மனைவிக்கும், மகனுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவன வாழ்வை வழங்க பிரார்த்திப்போமாக.

SLMC A.C.Yahiyakhan – High Command Member,
Director Finance & Account and Treasurer Ampara District.

Published by

Leave a comment