Author: yourkattankudy.com
-
அப்துல் கலாம்: குவியும் அனுதாப அலை
– எம்.ஐ.அப்துல் நஸார் டெல்லி: இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீர் சுகயீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் திங்கட்கிழமை (27) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 83.
-
ரிசாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம்
– ஏ.எச்.எம் பூமுதீன் அம்பாறை: அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லாஹ்வும், அப்துர் றஹீமும் 3,06,72,000 ரூபா பெற்றதை மறுத்து சத்தியம் செய்ய முன்வருவார்களா?
– புவி.எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: தனது கைகள் கறை படியாதவை என்றும், கடந்த 25 வருடங்களில் ஒரு சதத்தையேனும் தான் ஊழல் மோசடி செய்யவில்லை என்றும் மேடைக்கு மேடை கூறி வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திடமிருந்து பெற்றுக் கொண்ட 25 இலட்சம் ரூபாவில் 23,30,000 ரூபாவுக்கு காணிகளைக் கொள்வனவு செய்தார்.
-
” என்னை எதிர்த்து நிற்கின்ற நல்லாட்சி சகோதரர்களை இணக்கப்பாட்டுடன் நாம் இம்மண்ணிலே இயங்குவதற்காக அழைப்பு விடுக்கிறேன்”: ஹிஸ்புல்லா!
– எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: “ரோட்டு போடுவதற்கும் கட்டடம் கட்டுவதற்கும் பாராளுமன்ற பதவி தேவை இல்லை என பொறியியலாளர் அப்துல் றகுமான் கூறுவது நகைப்புக்கிடமானது” இவ்வாறு எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது தெரிவித்தார். அவர் மேலும் தனதுரையில்,
-
கிளிநொச்சி 3 வயது சிறுமி மரணம்:14வயது சிறுவன் கைது
கிளிநொச்சி: கிளிநொச்சி பிரதேசத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் சென்ற, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 3 வயது குழந்தையின் மரணம் தொடர்பில் 14 சிறுவன் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள அந்தச் சிறுவனை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதிவரை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் காலமானார்
கருத்தரங்கில் பேசிய போது திடீர் மாரடைப்பு! டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாரடப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82. மேகாலயாவில் ஐ.ஐ.எம்.மில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த போது கலாம் திடீரென மயங்கி விழுந்தார்.இதனால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியைடந்தனர்.
-
குருணாகலில் மஹிந்தவின் தேர்தல் வியாபாரம் கடுமையாகப் பாதித்துள்ளது
குருணாகல்: பொதுத் தேர்தலுக்காக ஐ.ம.சு.கூட்டணியில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். தம்பதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
“ஐ.எஸ். தொடர்பில் இலங்கையில் பாதுகாப்பு படையினரும் உளவுத் துறையினரும் உஷார்படுத்தப்பட வேண்டும்”: பொதுபலசேனா ‘
கொழும்பு: விடுதலைப் புலிகளைவிட பயங்கரமான கொலைகார அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பில் இலங்கையில் பாதுகாப்பு படையினரும் உளவுத் துறையினரும் உஷார்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் அதன் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்தார்.
-
“சாய்ந்தமருது மக்களை மிகக்கூடுதலாக நேசிக்கின்றவர் தலைவர் ஹக்கீம்” – சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வும் கருத்தரங்கும் நடைபெற்றது. வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
-
SLMC – NFGG இணைந்து நடாத்திய பாலமுனை தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாலமுனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடாத்திய பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான 3வது பிரச்சாரக் கூட்டம் நேற்று பாலமுனையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பொலீஸாரின் பாரபட்சமான நடவடிக்கையைக் கட்டுப்படுத்துமாறு ஊழல் மோசடி ஒழிப்பு நிறுவனத்திடம் புவி முறைப்பாடு
காத்தான்குடி: வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்வதற்கான நேரங்களை ஒதுக்குவதில் காத்தான்குடி பொலிஸார் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டப்படுகின்றது.
-
சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள மு.கா. வேட்பாளர் ஷிப்லி பாறூக்கின் தேர்தல் சுவரொட்டிகள்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது பிரச்சார மேடைகளில் நல்லாட்சி குறித்து மணிக்கணக்கில் உரையாற்றி வருகின்ற அதேசமயம், அவரது தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் காத்தான்குடிப் பிரதேசத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் பரவலாக ஒட்டப்பட்டிருப்பதாக நல்லாட்சியை விரும்பும் வாக்காளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.