” என்னை எதிர்த்து நிற்கின்ற நல்லாட்சி சகோதரர்களை இணக்கப்பாட்டுடன் நாம் இம்மண்ணிலே இயங்குவதற்காக அழைப்பு விடுக்கிறேன்”: ஹிஸ்புல்லா!

hizbullah1– எம். எச். எம். அன்வர்

காத்தான்குடி: “ரோட்டு போடுவதற்கும் கட்டடம் கட்டுவதற்கும் பாராளுமன்ற பதவி தேவை இல்லை என பொறியியலாளர் அப்துல் றகுமான் கூறுவது நகைப்புக்கிடமானது” இவ்வாறு எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தனதுரையில்,

“எனது 25 வருட அரசியல் வாழ்வில் நான் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். இந்த நாட்டுக்கே தெரியும் காத்தான்குடியில் எவ்வாறான அபிவிருத்தி மேற்கொண்டுள்ளேன் என்று, ஆனால் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் நேற்று இடம்பெற்ற சதுரங்கம் நிகழ்ச்சியில் தெரிவத்துள்ளாராம் இந்த பிரதேசத்தில் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளவில்லை என்றும் ஒரு வாசிகசாலை கூட அங்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளமையானது யார் பொய் சொல்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”.

hizbullah1

“நான் அதை விமர்சிக்கவில்லை. அவர் தெரிவித்த கருத்துக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது அதற்காகவே இவைகளை தெரிவிக்கின்றேன். நல்லவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் குறைகளை மாத்திரம் சொல்லக்கூடாது எதற்கெடுத்தாலும் விமர்சனம்தான் செய்கிறார்கள். என்னை தோற்கடிப்பதற்காகவே பல தேர்தல்களில் இவர்கள் இறங்கியுள்ளார்கள். இவர்களின் கதையை கேட்டால் கழுதையை தூக்கிக்கொண்டு சென்ற அப்பாவும் மகனும் நடத்திக்கொண்டு சென்றாலும் ஏசுவார்கள் கூட்டிக் கொண்டு சென்றாலும் ஏசுவார்கள் என்ற கதையில்தான் முடியும்”.

hizbullah

“நான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்தபோது பல அபிவிருத்தி திட்டங்களை இம்மண்ணுக்கு செய்துள்ளேன். ஏனைய சமூகம் பார்த்துக்கொண்டிருக்கின்றது முஸ்லிம் சமூகத்தவர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதிவியிலருந்து தூக்குவதற்காக. நான் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பதவியிலிருந்து வெறும் பாராளுமன்ற பதவியில் இருக்கும் போதே கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கட்டங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் மீரா பாலிகாவுக்கு வரவிருந்த நிதியை தடை செய்தார். இதற்கு பாராளுமன்ற பதவி இம்மண்ணுக்கு தேவையில்லையா என்பதை சிந்தியுங்கள்”.

election 2015

“ஒரு பிரதேசத்திலும் இல்லாத வகையில் காத்தான்குடியில் 4 பாடசாலைகளை 1000 பாடசாலை திட்டத்தினுள் கொண்டுவந்தோம். நான் அபிவிருத்தி செய்யவில்லை என கூறுகின்றனர். காத்தான்குடி மத்திய கல்லூரியை எடுத்துக்கொள்வோம். விடுதி கட்டுவதற்காக 870 மில்லியன் ரூபா செலவில் செய்து கொண்டிருக்கிறோம் விஞ்ஞான ஆய்வு கூடம் கட்டி கொடுத்துள்ளேன் விளையாடுவதற்கு பெட்மின்ரன் வசதி செய்து கொடுத்துள்ளேன் நிகழ்ச்சி மண்டபத்திற்காக நிதி ஒதுக்கியுள்ளேன்”.

“மாத்திரமல்ல சுனாமி காலப்பகுதியில் வைத்தியசாலையை தரைமட்டமாக்கி நோர்வே நாட்டின் உதவியுடன் வைத்தியசாலையை கட்டி முடித்துள்ளோம். அப்போது நான் விமான சேவை தலைவராக இருந்தேன். அத்துடன் அல்அக்ஷா வடிவிலான பள்ளிவாசலை கட்டிக்கொண்டிருக்கிறோம் காத்தான்குடி கடற்கரை வீதியை கார்பட் வீதியாக செய்துள்ளோம்”.

“காத்தான்குடி ஊர் வீதி அபிவிருத்திக்கு பல பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளேன் .இவ்வாறான பல அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளேன்”.

“அதேபோல் சமூகத்தை பாதுகாக்கும் நேரத்தில் அதனையும் செய்தோம். விடுதலைப் புலிகளுடன் பேசி சமூகத்திற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனையும் செய்துள்ளோம்”.

“மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் இப்பிரதேசத்திற்கு பாராளுமன்ற பதவி தேவைதானா? இல்லையா? என்பதை நீங்களே சிந்தித்து வாக்களியுங்கள்”.

“தேர்தல் முடிந்த பின்னராகிலும் சரி என்னை எதிர்த்து நிற்கின்ற சகோதரர்களை எல்லாவற்றையும் மறந்து இணக்கப்பாட்டுடன் நாம் இம்மண்ணிலே இயங்குவதற்காக அழைப்பு விடுக்கின்றேன். நான் மரணித்தாலும் இம்மண்ணுக்கு சிறப்பான தலைமைத்துவம் வேண்டும். இதற்காக நான் அப்துர் ரஹ்மான் அவர்களை பலமுறை அழைத்துள்ளேன் இதையே நான் எதிர்பார்க்கிறேன் எனவும் தனது உரையில் எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

Published by

Leave a comment