கிளிநொச்சி 3 வயது சிறுமி மரணம்:14வயது சிறுவன் கைது
கிளிநொச்சி: கிளிநொச்சி பிரதேசத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் சென்ற, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 3 வயது குழந்தையின் மரணம் தொடர்பில் 14 சிறுவன் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள அந்தச் சிறுவனை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதிவரை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாய்க்கால் ஒன்றில் குழந்தையைக் குளிப்பாட்டிய தாய் அந்தக் குழந்தையை அவ்வழியால் வந்த சிறுவன் ஒருவனுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் அந்தப் பெண் குழந்தை காணாமல் போயிருந்தது.காணாமல் போன குழந்தையைத் தேடுவதில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரத் தேடுதலின் பின்னர் குழந்தை காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில், விளைந்த நெல் வயலுக்குள் குழந்தையின் சடலம் உருக்குலைந்த நிலையில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குழந்தையின் ஆடைகளைக் கொண்டு இந்த சடலம் காணாமல் போன குழந்தையினுடையதே என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், குழந்தைக்கு என்ன நடந்தது, எவ்வாறு அது உயிரிழந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
காணாமல் போன குழந்தையைத் தேடுவதில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
சடலாமகக் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் உருக்குலைந்திருந்ததனால், ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனையில் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.
முக்கிய பாகங்கள் மரபணு பரசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கும், சடலத்தை உடற்கூற்று தடயவியல் நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
Leave a comment