டெல்லி: இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீர் சுகயீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் திங்கட்கிழமை (27) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 83.
2002ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு அத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் விஞ்ஞானியாகவும், விஞ்ஞான நிருவாகியாகவும் நான்கு தசாப்தங்களாகக் கடமையாற்றியிருந்தார். இந்திய அணுத் திட்டத்தில் ஒழுங்கமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மிக முக்கிய பங்களிப்பினை வழங்கி இருந்தார்.
அவர் இந்தியப் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் கடமையாற்றினார்.
கடந்த திங்கட்கிழமை மேகாலயா மாநிலத்pன் தலைநகரான ஷில்லோங் பிரதேசத்திலுள்ள இந்திய முகாமைத்துவ நிறுவனத்தில் மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டார் என மாநிலத்தின் பிரதம செயலாளர் பி.பி.வர்ஜ்ரி தெரிவித்தார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் பி.பி.வர்ஜ்ரி தெரிவித்தார்.
சமஷ்டி அரசாங்கத்தினால் ஏழு நாட்கள் துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் செயலாளர் எல்சி.கோயல் தெரிவித்தார்.
கலாமின் உடல் நல்லடக்கத்திற்காக செவ்வாய்கிழமையன்று டெல்லிக்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது.
‘அறிவியல் மற்றும் புதுமை தொடர்பான அவரது ஆர்வம் அத்துடன் சிறந்த விஞ்ஞானி, நிருவாகி, கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளர் என்ற வகையில் அவரது பங்களிப்பு நீண்டகாலம் நினைவில் இருக்கும்’ என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.‘அவரது மறைவு அறிவியல் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும். இந்தியாவை மிக உயரத்திற்கு அவர் கொண்டு சென்றார். அவர் வழிகாட்டினார்’ என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘முழுத் தலைமுறைக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக இருந்தார்’ என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘மிகச் சிறந்த விஞானி, அறிவாளி, மில்லியன் கணக்கான இளைஞர்கள் அதேபோன்று வயதானவர்களை தனது கடமை மூலமும் நடத்தை மூலமும் கவர்ந்த உண்மையானதொரு நாட்டுப்பற்றாளர் ‘ என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அப்துல் கலாமை விபரித்துள்ளார்.
அப்துல் கலாம் தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் பின்தங்கிய பாடசாலைகளுக்கும் கல்லூகளுக்கும்சென்று அவர்களது கனவுகளை வெற்றி கொள்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.
அவர் பதவி விலகிய பின்னரும் அவரது ஆலோசனைகளை பெறுவதற்காக தினமும் நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து வந்து குவிந்தன.
அப்துல் கலாமுக்கு இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது உட்பட பல கௌரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
1998ஆம் ஆண்டு இந்தியா அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டபோது மிகக் காத்திரமான பங்கினை அவர் ஆற்றினார்.
அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அவற்றுள் விங்ஸ் ஒப் பையர், இந்தியா 2020, இக்னிட்டட் மைன்ட்;ஸ் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.
கலாம் மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தைக்கு ஒரு மீன்பிடி வள்ளங்கள் சொந்தமாக இருந்தன. தனக்குச் சொந்தமான வள்ளங்களை அவர் உள்ளூர் மீனவர்களுக்கு வாடகைக்கு விடுவார்.
அப்துல் கலாம் தன்னை ‘இந்தியத் தயாரிப்பு’ என கூறிக் கொள்வார். ஏனெனில் அவர் வெளிநாடுகளில் பயிற்சிபெற்றதே கிடையாது
Published by

Leave a comment