Author: yourkattankudy.com
-
இலங்கையின் 22 ஆவது பிரதமர் பதவியேற்றார்: உலக சாதனை சமனானது!
கொழும்பு: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக ரணில் சிரியான் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றார். இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில், அமையவுள்ள 8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
-
ஐ.தே.க. தேசியப் பட்டியல் வெளியீடு: தோல்வியடைந்த எவருக்கும் இடமில்லை
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரத்தை வெளியிட்டது. குறித்த பட்டியல் தேர்தல்கள் ஆணையாளருக்கு இன்று (21) சமர்ப்பிக்கப்பட்டது.. இதில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதோடு, கடந்த ஆட்சியின்போது ஐ.ம.சு.முவிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்குவதில் பங்குவகித்த அதுரேலிய ரத்தின தேரர் மற்றும் எம்.கே.டி.எஸ். குணவர்தன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்
கொழும்பு: நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் (196) பெயர்களை வர்த்தமானியில் அச்சிடும் பணியில் இன்று (20) ஈடுபடவுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவித்தல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை தேர்தல்கள் ஆணையாளர் வழங்கியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான குறித்த பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
-
கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் சங்கக்கார
கொழும்பு: உலக அளவில் கிரிக்கெட் போட்டியில் ஆளுமை செலுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் வியாழக்கிழமை தொடங்கிய போட்டியே அவர் கடைசியாக விளையாடும் டெஸ்ட் போட்டியாகும்.
-
நான்கு வருடங்களின் பின்னர் ஈரானில் பிரிட்டிஷ் தூதரகம் திறக்கப்படுகிறது
லண்டன்: பிரிட்டன் ஈரானுக்கான தனது தூதரகத்தை அந்நாட்டு தலைநகர் டெஹ்ரானில் இவ்வார இறுதியில் மீண்டும் திறக்கவுள்ளது.2011ஆம் ஆண்டில் ஈரானிய ஆர்ப்பாட்டக் குழுவொன்று பிரிட்டன் தூதரகக் கட்டடம் அமைந்துள்ள வளாகத்திற்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கிருந்த ஆவணங்களையும் திருடிச் சென்றது. இதையடுத்து, அந்தத் தூதரகம் மூடப்பட்டது.
-
தங்கம் நிரம்பிய நாஸி காலத்து ரயில் கண்டுபிடிப்பு
பேர்லின்: தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஸி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.1945ஆம் ஆண்டில் போலந்து நாட்டு நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில் அந்தப் பகுதியில் காணாமல் போனது.
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றார் றிஷாத் பதியுதீன்
கொழும்பு: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் எமது கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்;ட வேட்பாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் எமக்கு ஆதரவளித்து வாக்களித்த அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் எனது சார்பிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கப் புதையல் கண்டுபிடிப்பு
ஃப்ளோரிடா: பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, 29 லட்சம் பவுண் மதிப்புள்ள தங்க நாணயங்களைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த புதையல் வேட்டையர்கள் கூறியுள்ளனர். இந்த நாணயங்கள் ஸ்பெயினைச் சேர்ந்தவை.இந்த 350 தங்க நாணயங்களும் ஃப்ளோரிடாவை ஒட்டியுள்ள அட்லாண்டிக் கடற் படுகையில் கடந்த 300 ஆண்டுகளாக புதைந்து கிடந்தன.
-
ரணில் நாளை பிரதமராக பதவியேற்பு
கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வௌ்ளிக்கிழமை (21) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
-
சந்திரிகா தலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைக்க சு.க அனுமதி
கொழும்பு: சந்திரிகா குமாரதுங்க தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
-
49 இலட்சம் ரூபாய் கட்டுப்பணம் அரசுடைமையானது
கொழும்பு: 196 எம்.பிக்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட 8 ஆவது பாராளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 6151 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல்கள் திணைக்களத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்துவது அவசியமாகின்றது.
-
குழந்தைக்கு உதவிய ரொனால்டோ: கருணை உள்ளத்தில் முதலிடம்!
லண்டன்: உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் இவர் ஒரு பிஞ்சுக் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கி உதவி செய்தார். தற்போது அந்த குழந்தை நலமாக இருக்கிறது.