குழந்தைக்கு உதவிய ரொனால்டோ: கருணை உள்ளத்தில் முதலிடம்!

ronaldoலண்டன்: உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் இவர் ஒரு பிஞ்சுக் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கி உதவி செய்தார். தற்போது அந்த குழந்தை நலமாக இருக்கிறது.

அதே போல் 1,65,000 அமெரிக்க டொலர்களை போர்த்துக்கல் புற்றுநோய் அமைப்பிற்கு கொடுத்து உதவினார்.

இதுமட்டுமல்ல அவ்வப்போது பலருக்கும் பல உதவிகளை செய்து வருவதால் ரசிகர்களின் மனதில் இவருக்கு எப்போது நீங்காத இடம் உண்டு.

இதனாலே ‘டூசம்திங்’ என்ற அமைப்பு உலகில் தொண்டு சார்ந்த பணிகளை செய்யும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு முதலிடம் கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் அப்ரிடி 20வது இடம்பிடித்துள்ளார்.

ronaldo

உதவும் மனம் கொண்ட வீரர்கள் பட்டியல்:-

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ (கால்பந்து)

2. ஜான் சீனா (தொழில்முறை மல்யுத்தம்)

3. செரீனா வில்லியம்ஸ் (டென்னிஸ்)

4. யூனா கிம் (படம் சறுக்கு)

5. நெய்மர் ஜூனியர் (கால்பந்து)

6. லெப்ரான் ஜேம்ஸ் (கூடைப்பந்து)

7. ஹீத்தர் ஓ’ரெய்லி (கால்பந்து)

8. மரியா ஷரபோவா (டென்னிஸ்)

9. மோ’னே டேவிஸ் (பேஸ்பால்)

10. ரிச்சர்ட் ஷெர்மன் (அமெரிக்க கால்பந்து)

11. மெரில் டேவிஸ் மற்றும் சார்லி ஒயிட் (ஐஸ் நடனம்)

12. டான் கார்ட்டர் (ரக்பி)

13. ரோமன் (தொழில்முறை மல்யுத்தம்)

14. ரொண்டா ரொஸ்சி (MMA)

15. லிண்ட்ஸே (ஆல்பைன் பனிச்சறுக்கு)

16. டாம் டேலி (டைவிங்)

17. பெத்தானியா ஹாமில்டன் (surfing)

18. சாய்னா நெஹ்வால் (பேட்மிண்டன்)

19. பால் ரபில் (லக்ரோஸ்)

20. ஷஹித் அப்ரிதி (கிரிக்கெட்)

Published by

Leave a comment