பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்

parliament[1]கொழும்பு: நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் (196) பெயர்களை வர்த்தமானியில் அச்சிடும் பணியில் இன்று (20) ஈடுபடவுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவித்தல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை தேர்தல்கள் ஆணையாளர் வழங்கியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான குறித்த பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த தேசியப் பட்டியல் கிடைக்கப் பெற்றதும் வர்த்தமானியில் அதனை பிரசுரிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

parliament[1]

இம்முறை தேசியப்பட்டியல் ஆசனங்களாக ஐ. தே. க 13, ஐ. ம. சு. மு 12, த.தே.கூ 02, ஜே.வி.பி 02 கிடைத்துன்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment