கொழும்பு: 196 எம்.பிக்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட 8 ஆவது பாராளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 6151 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல்கள் திணைக்களத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்துவது அவசியமாகின்றது.
அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு எவ்வித ஆசனத்தையும் பெறாத நிலையில், தேர்தல் விதிகளுக்கு அமைய குறிப்பிட்ட தேர்தல் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட வாக்குகளில் எட்டில் ஒரு (1/8) பங்கு வாக்குகளைப் பெறாத அனைத்து கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களினதும் கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் 2498 பேரினால் கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட 48 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக இப்பணம் சுயாதீன கட்சிகளினால் செலுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தேர்தலில் 201 சுயாதீனக் குழுக்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Published by

Leave a comment