கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் சங்கக்கார

Kumar-Sangakkara-007கொழும்பு: உலக அளவில் கிரிக்கெட் போட்டியில் ஆளுமை செலுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் வியாழக்கிழமை தொடங்கிய போட்டியே அவர் கடைசியாக விளையாடும் டெஸ்ட் போட்டியாகும்.

குமார் சங்கக்கார கடந்த 2000ஆம் ஆண்டு காலி கிரிக்கெட் மைதானத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் நிக்கி போயே வீசிய பந்தில் 23 ஓட்டங்களை முதல் ஆட்டத்தில் எடுத்து ஆட்டமிழந்தார். அந்தப் போட்டியில் இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வென்றது.

kumar-sangakkara-220612[1]

சங்கக்கார தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இதுவரை 38 சதங்களும் 52 அரை சதங்களும் அடித்துள்ளார். இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள குமார் சங்கக்கார 12,350 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் 38 சதங்களும், 52 அரைச் சதங்களும் அடங்கும்.

sangadraw_2789902[1]

கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் சிட்டகாங் நகரில் அந்நாட்டுக்கு எதிரான ஒரு போட்டியிலேயே அவர் மிக அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 319 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Kumar-Sangakkara-007

Published by

Leave a comment