கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரத்தை வெளியிட்டது. குறித்த பட்டியல் தேர்தல்கள் ஆணையாளருக்கு இன்று (21) சமர்ப்பிக்கப்பட்டது.. இதில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதோடு, கடந்த ஆட்சியின்போது ஐ.ம.சு.முவிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்குவதில் பங்குவகித்த அதுரேலிய ரத்தின தேரர் மற்றும் எம்.கே.டி.எஸ். குணவர்தன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இப்பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இடம்பெறவில்லை என்பதுடன் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படாது என அக்கட்சி குறிப்பிட்டதற்கு அமைய தோல்வியுற்ற வேட்பாளர் ரோசி சேனாநாயக்கவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்
முழு விபரம்
1. டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் (ஶ்ரீ.ல.மு.கா)
2. எம்.எஸ். சல்மான் (ஶ்ரீ.ல.மு.கா)
3. எம்.எச்.எம். நவவி (அ.இ.ம.கா)
4. டி.எம். சுவாமிநாதன்
5. அதுரேலிய ரத்தினதேரர்
6. கரு ஜயசூரிய
7. மலிக் சமரவீர
8. பேராசிரியர் சி.ஏ. மாரசிங்க
9. டொக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன
10. திலக் மாரப்பன
11. எம்.கே.டி.எஸ். குணவர்தன
12. அனோமா கமகே
13. சிறினால் டி மெல்
Leave a comment