நான்கு வருடங்களின் பின்னர் ஈரானில் பிரிட்டிஷ் தூதரகம் திறக்கப்படுகிறது
லண்டன்: பிரிட்டன் ஈரானுக்கான தனது தூதரகத்தை அந்நாட்டு தலைநகர் டெஹ்ரானில் இவ்வார இறுதியில் மீண்டும் திறக்கவுள்ளது.2011ஆம் ஆண்டில் ஈரானிய ஆர்ப்பாட்டக் குழுவொன்று பிரிட்டன் தூதரகக் கட்டடம் அமைந்துள்ள வளாகத்திற்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கிருந்த ஆவணங்களையும் திருடிச் சென்றது. இதையடுத்து, அந்தத் தூதரகம் மூடப்பட்டது.
மேலும் லண்டனிலிருந்த ஈரானிய தூதரகத்தை மூடிய பிரிட்டன் அரசாங்கம், அந்நாட்டு இராஜிய அதிகாரிகளையும் வெளியேற்றியது.
அணு ஒப்பந்தம் தொடர்பில், ஆறு உலக வல்லாதிக்க நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தமொன்றை எட்டியதையடுத்து, தமது தூரகத்தை டெஹ்ரானில் மீண்டும் திறக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக, பிரிட்டனின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிலிப் ஹெமண்ட் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
2011ல் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் தூதரகத்திற்குள் நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
இதற்காக தொழிலதிபர்களுடன் ஃபிலிப் ஹெமண்ட் இரானுக்கு இந்த வார இறுதியில் செல்லவிருப்பதாக மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.
இந்தத் தூதரகத்தை மீண்டும் திறக்கப்போவதாக கடந்த ஜூன் மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்பக் காரணங்களால் இந்தத் திறப்பு தாமதமானது.
பிரிட்டிஷ் தூதரகம் மூடப்பட்டபோது, அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் பிற உபகரணங்களை மீண்டும் இறக்குமதி செய்ய ஈரான் தயக்கம்காட்டிவந்ததால் இந்தத் தாமதம் ஏற்பட்டது.
Leave a comment