கொழும்பு: நாளை சனிக்கிழமை இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கான நுழைவுப் பரீட்சை கொழும்பில் இடம்பெறுகின்றது. இதில் எழுதுகின்ற தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி.
சட்டத்தரணித் தொழில் போன்ற உயரிய பதவிகளை கணிசமான அளவில் தமிழ் பேசும் சமூகத்தினர் வகிக்க வேண்டும் என்பது பெருவிருப்பம் ஆகும் , ஆனால் சட்டக் கல்லூரிக்கு தமிழ்மொழி மூலம் தெரிவாகின்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை குறைவானதாகவே உள்ளது, இருப்பினும் இதற்காக சோர்வடைந்து விட கூடாது என்றும் இவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதே நேரம் ஒரு முறை முஸ்லிம்கள் வழமையை காட்டிலும் அதிக அளவில் தெரிவானபோது அப்போது நீதி அமைச்சராக இருந்த மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருந்தன என்று இதில் சுட்டிக் காட்டி உள்ள ஹசன் அலி ஆணைக் குழு அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு எதுவும் நடந்து இருக்கவில்லை என்றும் தலைவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது என்றும் கூறி உள்ளார்.
இருப்பினும் தலைவர் நிரபராதி என்று ஆணைக் குழுவால் பிரகடனப்படுத்தப்பட்டார் என்கிற விடயத்தை ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்தி இருக்கவில்லை என்றும் ஹசன் அலி கவலை வெளியிட்டார்.
(மின்னஞ்சல்: தாய்நாடு)
Published by

Leave a comment