தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

eid prayer atharகாத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் இன்று காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம.ஹாஜியார் வளவிற்கு முன்பாக) ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பாவும் இடம்பெற்றது. குத்பா பிரசங்கத்தினை பிரபல தென்னிந்திய இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தினார்.

அதில் அவர், தௌஹீத் பேசக்கூடிய சகோதரர்கள் தற்காலத்தில் சிறிய விடயங்களை காரணம் காட்டி பல பிரிவுகளாக பிரிந்திரிப்பதாகவும், இதன்பின்னராவது ஒன்று சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், இன்றைய தினத்தில் அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார்.

eid prayer athar

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

kovai ayyoob

வழக்கமாக தொழுகை நடாத்தப்படும் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரைப் பகுதி கடலரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இம்முறை ஆ.ம.ஹாஜியார் வளவிற்கு முன்பாக தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

eid prayer darul athar

Published by

Leave a comment