- KCDA ஊடகப்பிரிவு
மீராவோடை: கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் வைபவம் 2016.01.08ஆந்திகதி வெள்ளிக்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDAயின் தலைவரும், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஜனாப். ஏ.எம். அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாபா. கே.எல்.எம். ஜெமிலுன்னிஸா,கோறளைப்பற்று மேற்கு முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஜனாப். எம்.எஸ். சுபைர் மற்றும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம், மட்/மம/செம்மன்னோடை அல்-ஹம்றா வித்தியாலயம், மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயம், மட்/மம/பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம், மட்/மம/மீராவோடை அமீர் அலி வித்தியாலயம் மற்றும் மட்/மம/மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலயம் போன்றவற்றில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இக்கொப்பிகள் வழங்கப்பட்டன.

Leave a comment