தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவருடன் கைலாகு செய்த ஜனாதிபதி

Genivan maithiri murdererகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை, அவர் சுகாதார அமைச்சராக இருந்தவேளையில் கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்ற விடுதலை புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த நபர் இன்று (08) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து மன்னிப்பு கோரினார்.

சிவராஜா ஜெனீவன் எனும் பெயருடைய இவர், பொலன்னறுவையில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டிருந்தமை நீதிமன்றில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, 10 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் (07) ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Genivan maithiri murderer

இன்று (08) இடம்பெற்ற, நல்லாட்சியின் ஒரு வருட நிகழ்வின்போது, வெள்ளை நிற உடையில் மேடைக்கு வந்த அவரை தட்டிக்கொடுத்த ஜனாதிபதியிடம், ஜெனீவன் மன்னிப்புக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

maithiri genivan

Published by

Leave a comment