Author: yourkattankudy.com
-
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் திரிபோஷா பதுக்கிய சுகாதாரபணிமனை ஊழியர்கள்
ஒட்டுசுட்டான்: குழந்தை கள், கற்பவதிகள், நிறைகுறைந்தபிள்ளைகள், பாலுட்டும்தாய்மார் போன்றோருக்கு கொடுக்கவேண்டியதே இந்த திரிபோஷாவை மக்களிடம் சேர்க்காமல் பதுக்கி வைத்து வீணடிக்கின்றனர். இந்த பதுக்கல் நீண்டகாலமாக நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெப்பாமான காலநிலை காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வேண்டுகோள்
எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: வெப்பாமான காலநிலை காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய காத்தான்குடி சிவில் பாதுகாப்புக் குழு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
நமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய வேண்டும் ஷிப்லி பாறுக்
மீராவோடை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2016.04.10ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை கல்குடாத் தொகுதியின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஞ்சோலை மற்றும் மீராவோடை கிராமங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.
-
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் பறிமுதல்
எம்.ரி.எம்.யூனுஸ் கொழும்பு: தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்னடத்தை விதிகள்
கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நன்னடத்தை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சபாநகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
10 வயது சிறுமிக்கு சூடு வைத்த சம்பவம்: தந்தை, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும்; ஏப்ரல் இம் மாதம் 25ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.
-
நாளை காத்தான்குடியில் மின் வெட்டு
எம்.ரி.எம்.யூனுஸ். காத்தான்குடி: இலங்கை மின்சார சபையின் திருத்தப் பணிகளுக்காக காத்தான்குடியில் நாளை 11.04.2016 திங்கட்கிழமை மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் ஏ.சி.எம்.நெளபல் தெரிவித்தார்.
-
கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி
பாலக்காடு: பரவூர் புட்டிங்கல் பகவதி ஆலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பில் நீதி விசாரணை ஒன்றுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அந்த வெடிவிபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆலயத் திருவிழாவின்போது நடத்தப்பட்ட வாணவேடிக்கையிலிருந்து வெளியான தீப்பொறிகள், பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது.
-
ஊரும் உஷ்ணமும்
கூரையால சூடிறங்கி குடலையும் கருக்கிறது வேறையா சூரியன்கள் வீட்டுக்குள் எரிகிறன. பள்ளிக்குப் போக என்று பாதையில் இறங்கினால் கொள்ளியை வைத்தது போல் கொதிக்கிறது மண்டை
-
“நிதி அதிகாரத்தினை எம்மிடம் தந்து பாருங்கள்”- நஸீர் அகமட்
மட்டக்களப்பு: ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து அதிகாரப் பகிர்வு என்று மட்டும் கூறாமல் அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்ற மாகாணசபைக்கான அதிகாரத்தினை வழங்க வேண்டும். நிதி அதிகாரத்தினைத் எங்களிடம் தந்து பாருங்கள், அடுத்த சில வருடங்களுக்குள் இந்த மாகாணத்தினை மிகவும் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
-
“தமிழ்பேசும் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்”- சம்பந்தன்
மட்டக்களப்பு: அதிகாரப்பகிர்வின் மூலம் எமது தமிழ் பேசும் மக்களான தமிழரும், முஸ்லிம்களும் தங்களது உரிமைகளை முழுமையாக பெறவேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்ட கோரிக்கையினை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவ்வாறு தமிழரும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் முழுமையான அதிகாரங்களைப் பெறமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
-
நம்பிக்கையுடன் தொடரும் ஷிப்லி பாரூக்கின் மனிதாபிமான அரசியல் முன்மாதிரி…..!!!!
ஓட்டமாவடி அகமட் இர்ஷாட் பாலமுனை: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மக்களின் குறைகளை அவர்களின் இல்லம் சென்று அறிந்து கொள்ளும் வீதிக்கு ஒரு நாள் எனும் நடமாடும் சேவை வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 8ஆவது மக்களின் குறைகளை கண்டறியும் நடமாடும் சேவை பாலமுனை கிராமத்தில் நடுவோடை பழைய அஸறப் வித்தியாலய வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.