“நிதி அதிகாரத்தினை எம்மிடம் தந்து பாருங்கள்”- நஸீர் அகமட்

hafeez nazeerமட்டக்களப்பு: ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து அதிகாரப் பகிர்வு என்று மட்டும் கூறாமல் அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்ற மாகாணசபைக்கான அதிகாரத்தினை வழங்க வேண்டும். நிதி அதிகாரத்தினைத் எங்களிடம் தந்து பாருங்கள், அடுத்த சில வருடங்களுக்குள் இந்த மாகாணத்தினை மிகவும் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதி விடயத்திலும் கட்டுப்பாடுகளை விதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாங்கம் மாகாணசபைக்கு ஒதுக்குகின்ற நிதி விடயத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து அதிகாரத்தினைத் தரவேண்டிய தேவை இருக்கிறது. வெறுமனே அதிகாரப் பகிர்வு எனக் குறிப்பிட்டு 95 வீதமான நிதியினை மத்திய அரசுக்குள் வைத்துக் கொண்டு போலித் தனமான அதிகாரப்பகிர்வும் இருக்கக் கூடாது என முதலமைச்சர் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

மட்டு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையிடம் இருந்து எந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் யாவும் மீண்டும் வழங்கப்பட வேண்டும். எனவே உண்மையான நிலையினை உணர்ந்து மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

Published by

Leave a comment