ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் திரிபோஷா பதுக்கிய சுகாதாரபணிமனை ஊழியர்கள்

Ottusuttanஒட்டுசுட்டான்: குழந்தை
​கள், கற்பவதிகள், நிறைகுறைந்தபிள்ளைகள்,
பாலுட்டும்தாய்மார் போன்றோருக்கு கொடுக்கவேண்டியதே இந்த திரிபோஷாவை மக்களிடம் சேர்க்காமல் பதுக்கி வைத்து வீணடிக்கின்றனர்.

இந்த பதுக்கல் நீண்டகாலமாக நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இது அங்கு வேலை செய்யும் சுகாதாரஉயர்அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது.இப்படிப்பட்ட செயலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் சில ஊழியர்கள் மட்டுமே
மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசுகாதாரபணிமனை ஊழியர்கள் செயற்பாடு பற்றி பிரதேசவாழ் மக்களிடம் கேட்டபோது மக்களை தாறுமாறாக குறிப்பாக (கர்ப்பிணிதாய்மாரை) ஏசுகின்றனர். தமது சுகாதாரபணியில்
ஒழுங்கீனம் மற்றும் சுகாதாரபணிமனையில் ஊழியர்கள் சரியாக கடமையாற்றாமை பற்றி வாய்மூலமாகவும், கடிதம்மூலமாகவும் உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

Ottusuttan

இதை சில ஊழியர்களின் பழக்கவழக்கங்கள் சரியானதாக இல்லை எனவும் கூறினர். அத்தோடு தங்களிடம் Photo,Video போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினர்.

அவர்கள் தங்கள் பழக்கவழக்கங்களை சீராகவேண்டும் எனவும் இல்லையேல் ஆதாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.பெயர் குறிப்பிடப்படாத சம்மந்தப்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்
என உயர்அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.

Published by

Leave a comment