கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி

Kerala fireபாலக்காடு: பரவூர் புட்டிங்கல் பகவதி ஆலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பில் நீதி விசாரணை ஒன்றுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அந்த வெடிவிபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆலயத் திருவிழாவின்போது நடத்தப்பட்ட வாணவேடிக்கையிலிருந்து வெளியான தீப்பொறிகள், பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது.

இந்த வெடிவிபத்து காரணமாக ஆலயத்துக்கு அருகிலிருந்த கட்டடம் ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. அந்த ஆலயத்தில் நடைபெறு வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் வாணவேடிக்கையைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

Kerala fire

Published by

Leave a comment