Author: yourkattankudy.com
-
பெருமாள் கோயிலில் வழிபட்ட முஸ்லிம் பெண்கள்
– AF-90 கடப்பா: சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு யுகாதி தினத்தன்று முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம். இந்த கோயில் தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினமான நேற்று பெருவாரியான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.
-
அரசியல்வாதிகளுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை
கொழும்பு: இலங்கையில் எந்த அரசியல்வாதிகளுக்கும் இனி இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே இராணுவம், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க அல்ல என அவர் கூறியுள்ளார்.
-
சவூதி அரேபியா – எகிப்தை இணைக்கும் வகையில் செங்கடலில் பாலம்
கெய்ரோ: சவூதி அரேபியாவையும் எகிப்தையும் இணைக்கும் வகையில் செங்கடலின் குறுக்கே பாலம் கட்டப்படும் என சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அறிவித்திருக்கிறார். இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் பெருமளவு மேம்படுமென ஒரு அறிக்கையில் அரசர் தெரிவித்திருக்கிறார்.
-
பாம்புகளுடன் நடனமாடிய பெண், பாம்பு கடித்து மேடையிலேயே பலி! (காணொளி)
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பாம்புகளுடன் மேடையில் பாட்டு பாடிய பெண் பாடகர் ஒருவரை, எதிர்பாராதவிதமாக ராஜநாகம் கடித்ததால் அவர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஜாவாவில் உள்ள கரவாங் என்ற நகரில் இர்மா ப்ளூ (29) என்ற பெண் ’பாப் பாடகர்’, சில தினங்களுக்கு முன்னர் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
-
சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் திடீர் புகை: பேங்கொக்கில் அவசர தரையிறக்கம்
பேங்கொக்: ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை கிளம்பியதை அடுத்து பேங்கொக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான UL 891 ரக விமானம் பாங்கொக்கில் இருந்து கொழும்பை நோக்கி இன்று புறப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் உள்ளே திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் திகிலடைந்தனர்.
-
ஜனாஸா அறிவித்தல்
ஓட்டமாவடி: கடந்த 2016.04.03ஆந்திகதி இணையத்தளங்களில் ஓட்டமாவடி – 01, புலியடி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை எனும் செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டதனை யாவரும் அறிவீர்கள்.
-
தப்லீக்கா தவ்ஹிதா தரீக்காவா பப்ளிக்காய் பாடினால் சாடுவார்
ஒன்றில் இருப்பவர் மற்றொன்றை குறை கூறுவார் -எது உயர்வென்றும் தாழ்வென்றும் உரை கூறுவார். தோன்றும் தீதடக்கும் தவ்ஹீத் இயக்கமும் ஊன்றும் ஈமான் வளர்க்கும் தப்லீக் இயக்கமும் சான்றோர் மதித்து நடக்கும் தரீக்கா இயக்கமும்-இவை மூன்றும் இணைந்து நின்றால் இஸ்லாம் வளருமே
-
பாராளுமன்றம் ஏன் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது.?
மஸிஹுதீன் இனாமுல்லாஹ் இலங்கைப் பாராளுமன்றம் நேற்று (05/04/2016) முதல் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது, புதிய தலை முறையினர் (எதிர்கால தலைவர்கள்) இது ஏன், எதற்கு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
-
சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்
புத்தளம் புளிச்சாக்குலத்தின் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயதான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் இம்தியாஸ் அவர்கள் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் அவதியுறுகிறார். இவர் கொழும்பு வெல்லம்பிட்டிய தாருல் உலூம் அல் ஹுமைதியா அரபுக்கலாசலையில் பட்டம்பெற்று வெளியேறிய ஒரு ஆலிம் ஆவார். அத்தோடு 22 வயது மனைவிக்கும் ஒரு வயது பெண் குழந்தைக்கும் பாதுகாவளாராக உள்ளார். அத்தோடு புனித அல் குர்ஆனை முழுமையாக மனம் செய்த ஒரு ஹாபில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அரசியலமைப்பு சபையாக மாறியது பாராளுமன்றம்
கொழும்பு: பாராளுமன்றம் நேற்று அரசியலமைப்பு சபையாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் முதன்முறையாகக் கூடியது. இதன்போது, ஏழு உபதலைவர்களும், வழிநடத்தல் குழுவுக்கான 21 உறுப்பினர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
-
நுவரெலியா ட்ரிப்
தங்க அறைக் கூலி தங்க விலை சொல்வார் சிங்கிள் ரூமுக்குள் தங்குவார் பத்துப் பேர் பொழுது புலர் காலை போருக்குச் செல்வது போல் பழுதான பாத்றூமில் படையணி காக்கும்
-
கண்டி பிரபல பாடசாலை ஒன்றில் பொது அறிவு வினாத்தாளில் சினிமா தொடர்பான வினா!!
கண்டி: கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பொது அறிவுப் பரீ்ட்சையில் வந்துள்ள கேள்வி, கல்வி ஆர்வலா்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்கள் இளம் சமுதாயத்தை குறிப்பாக மாணவ சமூகத்தை சீரழிப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு.இந் நிலையில் இவ்வாறு பாடசாலை நிர்வாகம் மாணவர்களை திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டும் வகையில் தனது காலாண்டுப் பரீட்சைக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது.