10 வயது சிறுமிக்கு சூடு வைத்த சம்பவம்: தந்தை, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

judgementகாத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும்; ஏப்ரல் இம் மாதம் 25ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.

தரம் 5இல் கல்வி கற்கும் 10வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கைது செய்யப்பட்டு இறுதியாக கடந்த 28 திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஆர்.கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்கள் இருவரையும் இன்று 11ம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று 11 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் இம் மாதம் 25ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment