Author: yourkattankudy.com
-
மட்டக்களப்பு கெம்பஸ்: கைச்சாத்தானது உடன்படிக்கை!
கோலாலம்பூர்: மட்டக்களப்பு கெம்பஸுக்கும் மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்குமிடையில் இன்று மாலை (03-05-2016) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கை ஊடாக மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலே Islamic Banking and Finance, Islamic shareeah, Quran உட்பட இஸ்லாமிய ஷரீஆ தொடர்பான பல்வேறு பட்ட கற்கை நெறிகளுக்கு Master, PHD மற்றும் பட்டப்படிப்புக்கான சகல உதவிகளையும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதற்கான காரணங்கள் இவைதான்..
லண்டன்: இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்… உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன.
-
மலேசியா பிராக் மாநிலத்தின் முதலமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இடையில் சந்திப்பு
கோலாலம்பூர்: மலேசியவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான அல்ஹாஜ் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் அவரது குழுவினரும் இன்று காலை மலேசியாவின் பிராக் மாநிலத்தின் முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர். பிராக் மாநிலத்தினுடைய முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீ சம்றி அப்துல் காதிர் அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
-
மீன்பிடி இலாகா வீதிக்கு நிதியுதவி!
காத்தான்குடி: காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி என்றழைக்கப்படும் ஏத்துக்கால் வீதியில் ABC என்றழைக்கப்படும் கொங்ரீட் கலவை கொட்டப்பட்டு நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்ததனால் இந்த கொங்ரீட் கலவை தூசுகள் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வீதியினால் பயணம் செய்பவர்கள் பல்வேறு சுவாச நோய்களை எதிர்கொண்டனர்.
-
‘கம்பளை நகர குப்பை அகற்றலுக்கு தீர்வு கிடைத்த போதும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமையால் நடைமுறைப்படுத்துவது சிக்கல்’
பா. திருஞானம் கம்பளை: கம்பளை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அண்மைக் காலமாக குப்பை முறையாக அகற்றாததினால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. சேகரிக்கப்பட்ட குப்பைகள் அம்புலுவாவ வத்தகல பிரதேசத்தில் கொட்டியதினால் அங்குள்ள கிராம மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது இந்த குப்பைகள் சரிந்ததினால் பாதிப்புக்குள்ளான 20 குடும்பங்களை சேர்ந்த 77 பேர் அம்புலுவாவ தர்மசார விகாரைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த குப்பை சம்பந்தமான பிரச்சினை கம்பளை நகர சபைக்கு பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. நகரசபைக்கு உட்பட்ட…
-
நீங்களும் உதவலாம்
காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனைப் பகுதியை அண்மித்த மஞ்சந்தொடுவாய் நியூ ஹிழுரிய்யாப் பள்ளிவாயல் வீதி முடிவடைகின்ற நாவற்குடா புதிய குடியேற்றப் பகுதியில் வசிக்கின்ற 55 வயதுடைய கடும் ஏழையான சித்தி றஜீனா என்பவரே இவராகும். கடந்த 10 வருடத்திற்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடிப்பாலப் பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றின் போது தனது இடதுகாலின் தொடைக்கும் முழங்காலுக்குமிடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் இன்றுவரை நடக்க முடியாது பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
-
கட்டார் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி!
MJ டோஹா: கட்டாரில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கட்டார் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கின்றது. சல்வா சுற்றுலா திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலேயே மேற்படி 11 பேர் பலியானதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
-
சீமெந்து விலை அதிகரிப்பு
கொழும்பு: 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலையை ரூபா 60 இனால் அதிகரிக்கும் கோரிக்கைக்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதியளித்துள்ளது. ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிக்காக 5 நிறுவனங்கள் கோரியிருந்ததாக அதிகார சபையின் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்தார்.
-
நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
கொழும்பு: நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (03) வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளது. அதற்கமைய, ரமழான் நோன்புக்காக எதிர்வரும் ஜூன் 06 முதல், ஜூலை 06 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு அறிவித்துள்ளது.
-
ரக்ஸபான , மல்வான -அந்தத்திகில் நிறைந்த நாட்களும் எமக்கு உதவியவர்களும்
2016 மே மாதத்தின் இறுதிவாரம். கடந்த 27வருடங்களில் நாம் சந்திக்காத மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு எமது ஊரைச்சூழ்ந்தது. களனி கங்கைநீர்மட்டம் ஊரைக் சுற்றி 10அடி உயரத்துக்கு மேல் பாய 450 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1700 மக்களை உள்ளடக்கிய எமது பிரதேசம்ஒரு தீவாகத் துண்டிக்கப்பட்டது. 80 வீடுகளுக்கு மேல் நீரில்மூழ்க அவர்கள் ஊரின் நடுப்பகுதியில் இருந்த உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
-
ஒருமித்த சர்வதேச ஹிஜ்ரி நாட்கணிப்பீடு இலங்கையிலும் அமுல் படுத்தப் பட உரிய தரப்புக்கள் உடன் படல் காலத்தின் கட்டாயமாகும்
கடந்த திங்கட் கிழமை துருக்கி தலை நகர் ஸ்தான்பூலில் இடம் பெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் முஸ்லிம் உம்மாவிற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியை அறிமுகப்படுத்துவது குறித்த உடன்பாடு எய்தப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் சுமார் 60 நாடுகளில் இருந்து பாத்வா, பிக்ஹு இஸ்லாமிய அமைப்புக்களும், இஸ்லாமிய வானியல் ஆய்வு நிறுவனங்களும் பங்கு பற்றின,
-
ICC-2017 சம்பியன் கிண்ண அட்டவணை வெளியீடு
லண்டன்: இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) நடாத்தப்படும் குறித்த போட்டிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பேறவுள்ளது. 1998 இல் ஐசிசி நொக் அவுட் தொடராக ஆரம்பிக்கப்பட்ட குறித்த தொடர், கடந்த 2002 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணமாக பெயர் மாற்றப்பட்டது.