‘கம்பளை நகர குப்பை அகற்றலுக்கு தீர்வு கிடைத்த போதும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமையால் நடைமுறைப்படுத்துவது சிக்கல்’

  • பா. திருஞானம்

trashகம்பளை: கம்பளை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அண்மைக் காலமாக குப்பை முறையாக அகற்றாததினால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. சேகரிக்கப்பட்ட குப்பைகள் அம்புலுவாவ வத்தகல பிரதேசத்தில் கொட்டியதினால் அங்குள்ள கிராம மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது இந்த குப்பைகள் சரிந்ததினால் பாதிப்புக்குள்ளான 20 குடும்பங்களை சேர்ந்த 77 பேர் அம்புலுவாவ தர்மசார விகாரைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த குப்பை சம்பந்தமான பிரச்சினை கம்பளை நகர சபைக்கு பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சேர்க்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் ஒன்று கிடைக்காமையே இதற்கு காரணமாக அமைகின்றது.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு கம்பளை நகர சபை புதிய குப்பை சேகரிப்பதற்கான நடைமுறை ஒன்றினை கொண்டு வந்துள்ளது. அதன்படி மக்கள் குப்பைகளை உக்கக்கூடிய குப்பைகள் , உக்காத குப்பைகள், மீள் சுழற்சி செய்யக்கூடிய குப்பைகள் என வேறுபடுத்தி வார நாட்களிலும் வார இறுதியிலும் வெ வ்வேறாக சேகரிப்பதற்கு முடிவு செய்யப்;பட்டது. உக்கக் கூடிய குப்பைகளை கலஹா பிரதேசத்தில் அமைந்திருக்கும் சேதன பசளை உற்பத்தி நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குப்பைகளை கொண்டு செல்வதற்கு அதி நவீன வாகனங்களும் கொண்டு வரப்பட்டன. ஏனைய குப்பைகள் மீள் சுழற்சிக்காக பயன்படுத்தப்படுவதுடன் எரியூட்டுவதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

trash

கம்பளை நகர சபை பிரச்சினைக்கு தீர்வுகளை முன்வைக்கும் போது அதற்கேற்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானதாகும் அவ்வாறான நிலையில் நகரத்தையும் சுற்று சூழலையும் நாட்டையும் சுத்தமாக வைத்திருக்கு முடியும். மேற்படி செயற்திட்டத்தை மக்களுக்கு முறையாக அறிவிப்பதற்கு ஒலிபெருக்கியின் மூலம் தெரு தெருவாக சென்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் மக்களில் ஒரு சிலர் இதற்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை. குப்பைகளை பிரித்து வழங்குவதில் மறுத்து வருகின்றனர். தங்கள் வீட்டு குப்பைகளை தெரு ஓரங்களிலும் நகர சாலைகளிலும் எறிந்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தை இவ்வாறு நடைமுறைப்படுத்துவதில் கம்பளை நகர சபை பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ள அதேநேரம் மக்கள் இதற்கு ஒத்துழைத்து நகர தூய்மைக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கின்றனர். உண்மையாகவே வீட்டு குப்பையை வீதியில் போட்டு விட்டு பிறரை குற்றம் சாட்டுவதிலோ நாறுகிறது என்று கூறுவதிலோ எந்த வித பயனும் இல்லை. அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டாலே குப்பை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

gampola

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s