நீங்களும் உதவலாம்

helpகாத்தான்குடி: காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனைப் பகுதியை அண்மித்த மஞ்சந்தொடுவாய் நியூ ஹிழுரிய்யாப் பள்ளிவாயல் வீதி முடிவடைகின்ற நாவற்குடா புதிய குடியேற்றப் பகுதியில் வசிக்கின்ற 55 வயதுடைய கடும் ஏழையான சித்தி றஜீனா என்பவரே இவராகும். கடந்த 10 வருடத்திற்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடிப்பாலப் பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றின் போது தனது இடதுகாலின் தொடைக்கும் முழங்காலுக்குமிடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் இன்றுவரை நடக்க முடியாது பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சில வருட காலங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட இரு வேறு விதமான சத்திர சிகிச்சைகளின்போது முறிவடைந்த பகுதிகளில் கம்பி வைக்கப்பட்டு அண்மையில் அவைகளும் நீக்கப்பட்டு தற்போது ஊன்று கோலின் உதவியோடு வெகு சிரமப்பட்டு நடந்து வருகிறார்.ஆனால் இன்று வரை
விபத்தினால் ஏற்பட்ட புண் குணமடையாது அதனால் நீர்வழிகின்ற பரிதாப நிலையிலேயே உள்ளார்.

இவர் திருமணம் முடித்து இவருக்கு கிடைத்த பெண் பிள்ளையின் முதலாவது வய.தில் மனிதாபிமானமற்ற கணவன் இவரை நிர்க்கதியாக கைவிட்டுச் சென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியான நிலையில் தன் 28 வயது மகளின் திருமண வாழ்வும் முடித்த ஒரு வருடத்தில் இரக்கமில்லாத கணவன் தன் தாயை நிர்க்கதியாகக் கைவிட்டு தந்தை சென்றதுபோல் மகளை விட்டுச் சென்று தற்போது நான்கு வருடமும் கழிந்த நிலையில் குடும்ப வறுமை ஏழ்மையோடு ஆண்துணையின்றி பெரும் அபலைகளாக தங்கள் வாழ்க்கையைச் சிரமத்துடன் கழிக்கின்றனர்.

இவர்கள் வசிக்கும் பகுதி வெள்ள நீரினால் முற்றாக மூழ்கக் கூடிய பகுதியாக இருப்பதுடன் இவர்கள் வசிக்கின்ற வீடானது முற்றிலும் தகரத்தினாலான உயரம் குறைந்த சிறிய அளவிலான கொளுத்துகின்ற நம் நாட்டின் தட்பவெப்ப நிலையின் உஷ்ணத்தைத் தகிக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதுடன் தாயும் மகளுமாக வாழ்கின்ற இந்தத் தகரக் கொட்டிலில் தமது இயற்கைக் கடனைக் கழிப்பதற்கு ஒரு மலசலகூடமும் இல்லாத நிலையில் பாரம்பரிய பண்டைய கால கழிவகற்றல் முறையை தம் காணியின் ஒரு புறத்தில் நிறைவேற்றுகின்ற இவர்கள் மழைக் காலங்களில் அதையும் தொடர முடியாது பெரும் சிரமப்படுகின்றனர்.

நம்மூரை எடுத்துக் கொண்டால் பல அடுக்கு மாடிகளும் வண்ண வண்ண வீடுகளும் உஷ்ணத்தைத் தணிக்க ஏசி அறையிருந்தும் நம் நாட்டின் வெப்பத்தினால் சூடு சூடு எனப் புலம்புகின்றபோது இந்தத் தகரக் கொட்டிலில் வாழும் இவர்களின் நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆண் துணையின்றிய கணவர் மாரினால் கைவிடப்பட்ட இந்த அபலைப் பெண்களுக்கு வறுமையின் கோரப்பிடியையும்
பசியையும் தம் தேவைகளையும் பூர்த்தி செய்ய வசதியின்றிய காரணத்தினால் தாயார் நடக்க முடியாத போதிலும் மிகுந்த சிரமப்பட்டு தன் நோயையும் பொறுட்படுத்தாது ஊன்றுகோலின் உதவியுடன் வீதிவீதியாக வீடுவீடாக யாசகம் கேட்டு சேருகின்ற சொற்ப பணத்தைக் கொண்டு சீவியம் நடாத்தும் வேளை மகள் அயலகத்தில் உள்ள ஒரு வேலைத்தளத்தில் சொற்ப வருமானத்துக்கு வேலை செய்து தன் தாயுடன் ஓரளவுக்கு தன்னால் முடிந்த ஒரு பங்களிப்பைச் செய்து சீவியம் நடாத்துகின்றனர்.

help

இந்தத் தாயாரை நாம் அணுகி நீங்கள் இவ்வாறு யாசகம் கேட்டுத் திரிய வேண்டாம் என நாம் சொன்னபோதே இவர் பற்றிய இந்த முழுவிபரம் நமக்கு அறியக் கிடைத்தது.

தங்களது வறுமை நிலையை ஓரளவு குறைக்கவும் யாசகம் கேட்டுச் செல்வதை தவிர்ப்பதுமாக இருந்தால் வீட்டிலிருந்தவாறே தானும் மகளும் அப்பம் இடியப்பம் தயாரித்து கூலிக்கு விற்றுத் தருபவர் ஒருவரைப் பிடித்து இப்பகுதியில் வியாபாரம் செய்து தமது அன்றாட வாழ்க்கைச் சுமையை ஓரளவு குறைக்க முடியுமெனவும் இதற்குரிய ஏற்பாட்டைத் தங்களால் எமக்குச் செய்து தர முடிந்தால் நல்ல புண்ணியம் கிடைக்குமெனவும் கண்களில் நீர்தழும்ப இத்தாய் கோரிக்கை வைத்தபோது என்னாலும் அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

அன்புச் சகோதரர்களே!

இவர்களுக்கு பல தேவைப்பாடுகள் இருந்தாலும் மிக முக்கியமான தேவையாக ஒரு மலசலகூடம்(கொமட் வசதியுடன்) மற்றும் சிறிது மாத வருமானம் மற்றும் இவர்களுடைய வீட்டுக்குத் தேவையான பௌதீக வசதிகள் சில மற்றும் இந்தத் தாயாருக்கான சில ஆடைகள் என்பன மிக முக்கிய தேவையாக உள்ளது.

முழுக்க முழுக்கவே அனைத்து உதவிகளையும் நம்மால் செய்ய முடியாவிட்டாலும் நம்மால் முடிந்தளவு சிறுசிறு உதவியையாவது நீங்கள் ஒவ்வொருவரும் செய்தால் ஓரளவுக்கேனும் இவர்களது பிரச்சினையைச் சரி பண்ணலாம்.அன்றாடம் நாம் எவ்வளவோ நம் குடும்பத்திற்காக தெரிந்தவர்களுக்காக நண்பர்களுக்காக பயனுள்ளதாகவும் பயனற்றதாகவும் நிறையச் செலவு செய்கிறோம்.அவற்றில் ஒரு பகுதியை ஒரு நாள் ஒதுக்கி இந்த ஏழையும் நோயாளியுமான அபலைப் பெண்களுக்குக் கொடுத்துதவினால் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் மறுமையில் நமக்கு மிகப்பெரிய வெகுமதியை ஈட்டித்தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நிச்சயம் தருமமானது நமது பொருளாதாரத்தை எவ்விதத்திலும் குறைவடையச் செய்யாது மாறாக அது விஸ்த்திரத் தன்மையையே தோற்றுவிக்கும்.அல்லாஹ் எம்மில் பலருக்கு சொத்தையும் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தந்திருப்பது நம்மிடையே பலவீனமானவர்களை நாம் கவனிக்கவேயன்றி நாம் மாத்திரம் உண்டு கழித்து வாழ்வதற்கல்ல.எனவே சகோதரர்களே உங்களது உதவியை இந்த மனிதநேயமிக்க மகத்தான பணிக்கு வழங்கிடுங்கள்.

இப்பணிக்காக நாம் நமது சகோதரர் ஒருவரின் வங்கிக் கணக்கையே பயன்படுத்துகிறோம்.காரணம் அப்போதுதான் ஒரு ஒருங்கமைத்த செயற்பாட்டுடனும் கட்டுக் கோப்புடனும் செயலாற்றி குறித்த நபருக்குரிய தேவைகளை இனங்கண்டு உதவி செய்கின்ற சகோதரர்களின் பணத்தை பயன்பாடு மிக்கதாக ஆக்கமுடியும்.எமது இப்பணி தொடர்பான கணக்கறிக்கைகளும் உதவியவர்களின் பெயர் விபரமும் வழங்குகின்ற நிகழ்வுகளும் எமது முகநூல் மற்றும் மனிதநேயப்பணி என்ற எமது வட்சப் குழுமத்திலும் அறிக்கைகள் மற்றும் போட்டோக்களாக பதிவிடப்படும்.இவ்வாறு பதிவிடப்படுவதானது எமது வெளிப்படைத்தன்மை நம்பகத்தன்மையை பறைசாற்றுவதற்காகவேயன்றி வேறெந்த பெருமைக்காகவும் கிடையாது.அத்துடன் வசதியிருந்தும் கொடுத்துதவாத தனவந்தர்களுக்கும் இதனைப் பார்ப்பதனூடாக கொடுக்க வேண்டுமென்ற உணர்வையும் தரும். அல்லாஹ்வின் திருப்திக்காக மாத்திரமே செய்யும் இப்பணிக்கு இரட்டை அர்த்தம் கற்ப்பிப்போரை அல்லாஹ் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டும்.எமது இப்பணியில் எமது நண்பர்கள் இருவரும் எம்மோடு இணைக்கப்பட்டுள்ளனர்.

இப்பெண்ணுக்கான உதவிகோரல் இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 15-06-2016 வரை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடைய வீட்டில் ஆண்துணை இல்லாததால் அவர்களுடைய தொடர்பிலக்கம் பதிவிடவில்லை எவராவது இவர்களை நேரில் சந்திக்க விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

எமது இப்பணிக்காக பொருளாதார உதவி செய்வோர் கணக்கறிக்கைகளில் பெயர் விபரங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எந்த நேரத்திலும் எம்மைத் தொடர்பு கொண்டு உங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது இப்பதிவை நீங்கள் தனியாக Copy & paste செய்து பதிவிடாமல் எமது பெயருடனேயே share செய்யுமாறு அல்லாஹ்வின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கும் கொடுத்துதவ மனமுண்டு ஆனால் கையில் பணமில்லையா கவலையை விடுங்கள் அல்லாஹ் உங்களது எண்ணத்துக்குக் கூலி தரப்போதுமானவன் ஆனால் ஒரு share ஐ பண்ணிவிடுங்கள் இருப்பவர்கள் கொடுத்துதவட்டும்.

‪#‎முக்கிய‬ குறிப்பு

நாம் இட்ட இப்பதிவில் எல்லா போட்டோக்களிலும் எமது பெயர் அட் பண்ணப்பட்டுள்ளது.அல்லாஹ் மீது ஆணையாக இது எமது பெருமைக்காக அல்ல.மாறாக எமது கடந்த மனிதநேயப் பணியுடைய ஆக்கத்தின்போது சில சகோதரர்கள் முறைகேடாக நமது ஆக்கத்தை மாத்திரம் copy செய்து போட்டோக்களையும் பதிவிட்டு அவர்களது பெயரில் ஆக்க மோசடி செய்ததால் ஏற்பட்ட சில அசௌகரியங்களைத் தவிர்க்கவே நாம் நமது பெயரைப் பதிவிட்டு உரிமை கோரும் விதமாக இவ்வாறு பதிவிட்டோம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்கு

A/C nomper

Msm musthakeem
71682555
Bank of cyelon
Kky branch

எமது தொடர்புகளுக்கு

0775524797

0720512025(Whatsapp&viber)

அதிகளவு முகநூலிலும் மற்றும் வட்ஸ்அப் குழுமங்களிலும் Share செய்து இந்த மகத்தான பணியில் நீங்களும் பங்குதாரறாக மாறி அல்லாஹ்விடத்தில் ஈடேற்றத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டி விடைபெறுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s