ரக்ஸபான , மல்வான -அந்தத்திகில் நிறைந்த நாட்களும் எமக்கு உதவியவர்களும்

malwana.jpg 12016 மே மாதத்தின் இறுதிவாரம். கடந்த 27வருடங்களில் நாம் சந்திக்காத மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு எமது ஊரைச்சூழ்ந்தது. களனி கங்கைநீர்மட்டம் ஊரைக் சுற்றி 10அடி உயரத்துக்கு மேல் பாய 450 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1700 மக்களை உள்ளடக்கிய எமது பிரதேசம்ஒரு தீவாகத் துண்டிக்கப்பட்டது. 80 வீடுகளுக்கு மேல் நீரில்மூழ்க அவர்கள் ஊரின் நடுப்பகுதியில் இருந்த உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

யாருக்கும் ஊருக்கு வெளியேசெல்ல முடியாத நிலை.மின்மாற்றி நீரில் மூழ்கியதால்மின்சாரம் இல்லை. எனினும்பள்ளி வாசலில் ஜெனரேட்டர்மூலம் மின்சாரம் இருந்தது.

50க்கு மேற்பட்ட வியாபாரநிலையங்களைக் கொண்டகடைத் தொகுதி முற்றாகநீரில் மூழ்கியதால் எந்தப்பொருளும் கடைகளில் வாங்கமுடியவில்லை.

அரச உதவிகளும்உடனடியாகக்கிடைக்கவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊர் மக்கள் எமதுநிருவாக சபையுடன்இணைந்து பாரிய வெள்ளநிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

முதல் மூன்று நாட்கள்உயிராபத்து இருந்தும் தூரஇடங்களுக்கு நீந்திச் சென்றுஇயந்திரம் இல்லாத படகில்அரிசி பருப்பு போன்றவற்றைகொண்டு வந்து மூன்று வேளையும் 1700 பேருக்குமேற்பட்டோருக்கு சமைத்துக்கொடுத்தனர். வெளியிலிருந்து மிகச் சிறியஉதவிகளே கிடைத்தன.

தொடர்ந்தும் நிலைமைமோசமடையத் தொடங்கியது.பயான்கள், அமல்கள் மூலமாகமக்கள் அல்லாஹ்வின்உதவியை கேட்டுபிரார்த்தித்தனர்.

திட்டமிட்ட அடிப்படையில்இயங்காவிட்டால் நிலைமைகைமீறி செல்லும் அபாயம்இருந்ததால் மஷூறா செய்யப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சமையல் , தரவு சேர்த்தல் &வெகுசனத் தொடர்பு ,பொருட்களைப் பெறுதல் ,விநியோகித்தல் , சுகாதாரம் ,படகு சேவைபோன்றவற்றுக்கு தனித் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

பாதிக்கப் பட்டோர்களின்விபரங்கள் , ஊரில் உள்ளோர்விபரங்கள் உடனடியாகத்திரட்டப்பட்டு ஒரே இரவில்கணனி மயப்படுத்தப்பட்டன.பாதிப்புக்கு ஏற்ப சிகப்பு ,மஞ்சள் , நீல நிற அட்டைகள்வழங்கப்பட்டு விநியோகம்இலகு படுத்தப்பட்டது

செய்தி இணையத் தளங்கள் ,பேஷ்புக் , வட்ஸ்அப்மீடியாக்கள் மூலமாகவும்ஊரின் முக்கியஸ்தர்கள்மூலமாகவும் வெளியில் உள்ளோரிடம் இருந்துஉதவிகள் கோரப்பட்டன.

அல் ஹம்துலில்லாஹ்.அடுத்த நாள் முதல் உதவிகள்வந்து குவியத் தொடங்கின.

ACJU , MFCD ,Mercy Lanka உட்பட பலநிறுவனங்கள் , தாவாஅமைப்புக்கள் ,பள்ளிவாயல்கள் ,தனிப்பட்டநபர்கள் , குழுக்கள்போன்றவற்றிலிருந்துபொருளாகவும் பணமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் வந்துசேரத் தொடங்கின.வெளிநாட்டில் வாழும்சகோதரர்கள் பல இலட்சரூபாய்க்களை எமது பள்ளிவாயல் கணக்கில்வைப்பிலிட்டனர் .

அமைச்சர் ரிசாட் பதுர்தீன் ,பிரதி அமைச்சர் துலிப்விஜேசேகர, பா.உ. மஸ்தான் ,ஜனாதிபதியின் சகோதரர்குமாரசிங்க சிறிசேன , NFGGதலைவர் அப்துர் ரஹ்மான்உட்பட பல முக்கியஸ்தர்கள்நேரடியாக வந்துநிலைமைகளை ஆராய்ந்தனர்.

பள்ளி வாசலில் 24 மணிநேரமும் வேலைகள் நடந்தன.

சாமத்தில் 2 மணிக்கும்பொருட்கள் படகில் வரும்.உடனே தொண்டர்கள்இருட்டில் சென்று ஆழமானநீரில் இறங்கி பொருட்களைசுமந்து பள்ளிக்கு கொண்டுவருவார்கள். உடனடியாகபள்ளி ஏடுகளில் விபரங்கள்பதியப்படும், அடுத்த நாளேஉரியவர்களுக்குவழங்கப்படும்.

மின்சாரம் இல்லாத நிலையில்தண்ணீர் தட்டுப்பாட்டுக்குமத்தியில் வெள்ளம் வடியும்வரை ஊரில் உள்ளஅனைவருக்கும் மூன்று நேரமும் உணவுவழங்குவதில் சமையலுக்குபொறுப்பான குழு பலசிரமங்களை எதிர்கொண்டது.

தினமும் இலவச மருத்துவமுகாம்கள் நடாத்தப் பட்டன.ஏனைய இனத்தவர்களுக்கும் அச்சேவைவிஸ்தரிக்கப்பட்டது

பொருள் விநியோகக் குழுசரியாகத் திட்டமிட்டுசெயற்பட்டதால் தவறானபொருள் விநியோகம்தடுக்கப்பட்டது

துப்பரவுப் பணித் தொண்டர்கள்கொட்டும் மழையிலும் தியாகத்துடன் வேலைசெய்தனர்.

படகு சேவை செய்தவர்களின்சேவை மெச்சத் தக்கது

மேலதிகப் பொருட்கள் ஏனையபிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டன . பக்கத்து ஊர்களில்வாழும் ஏனையஇனத்தவர்களுக்கு பொருள்வழங்க விரும்பியவர்களுக்குஎமது பள்ளிவாசலினூடாகஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தற்போது பாதிப்புக்கள்தொடர்பான விபரங்கள்திரட்டப் படுகின்றன,கையிலுள்ள பணம்அவர்களுக்கு உரியமுறையில் பிரித்துக்கொடுக்கப்படும்

கடந்த காலங்களில் ஏனைய இடங்களில் உதவி தேவைப்பட்ட போதெல்லாம் இங்குள்ள சகோதரர்கள் அத்தகைய இடங்களுக்கு உடனடியாக உதவி செய்தனர். அதற்குப் பிரதி பலனாக இத்தகைய உதவிகளைஏற்படுத்தித் தந்தஅல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

பொருளாக, பணமாகஉதவியவர்களுக்கும் ,மருத்துவ சேவை ,படகுசேவை , துப்பரவாக்குமசேவை, சமையல்போன்றவற்றில் தியாகத்துடன்உதவியவர்களுக்கும் , எமதுவேண்டுகோளை உலகம்முழுக்கக் கொண்டு சென்றசெய்தித் தளங்கள் மற்றும்முகனூல் சகோதரர்களுக்கும்ஏனைய எல்லா வழிகளிலும்உதவிய அனைத்துசகோதரர்களுக்கும் எமது ஊர்மக்கள் சார்பாக நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம் .

அல்லாஹ் உங்கள்அனைவருக்கும் நற்கூலிவழங்குவானாக

இப்படிக்கு

நிர்வாக சபை

ரக்ஸபான ஜும்ஆபள்ளிவாசல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s