Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதி காணிகள் அரசாங்கத்தினால் பலவந்தமாக பரிக்கப்படுவது பற்றி குச்சவெளி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஆதம்பாவா தௌபீக் வழங்கிய செவ்வி

    அபூ சலாமா  திருகோணமலை: இன்று குச்சவெளி பிரதேசத்தில் பல வகையான காரணங்களைக் கூறி இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த காணிகளுக்குள்ள அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரக் காணிகள் மற்றும் உறுதியுடைய காணிகளென பல வகையான அது மட்டுமல்ல கடந்த 30 வருடமாக காணிக் கச்சேரி நடத்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாததனால் இன்று வரைக்கும் அந்த மக்கள் காணிக்கு எந்தவித ஆதாரமற்றவர்களாக இருந்து வருகின்றார்கள்.

  • அரசாங்கம் நிராகரித்த நவிபிள்ளையின் கோரிக்கைகள்

    – MJ கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை விடுத்த கோரிக்கைகளை, இலங்கை அரசு நிராகரித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு எதிராக அந்தக் கோரிக்கைகள் இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

  • நவிப்பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் முறுகல்

    கொழும்பு: விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார்.

  • கடுமையான சட்டங்களின் எதிரொலி: பிரிட்டனுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது

    கொழும்பு: வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் செல்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்விக்காகவும், பணிக்காகவும் பல்வேறு நாட்டினர் பிரிட்டனுக்கு அதிக அளவில் சென்று வந்தனர். இந்நிலையில் விசா கட்டணம் உயர்த்தப்பட்டு சட்டம் கடுமையாக்கப்பட்டதால், சமீப காலமாக அந்த நாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

  • SLMC கண்டியில் சூறாவளிப் பிரச்சாரம்

    – றிஸ்கான் முகம்மட் கலகெதர: கண்டி கலகெதரவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் ஆவர்கள் உரையாற்றுவதையும், முதைமை வேட்பாளர் உவைஸ் ஹாஜியார், தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹியா கான் மற்றும் கலந்து கொண்டோர்களைக் காணலாம்.

  • பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்…

    கொழும்பு: பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் இருந்து சுமார் 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை சுங்கத் திணைக்களத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 100 கோடிரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் பிரஜையொருவரும்,

  • ஐரோப்பா சுப்பர் கிண்ணம்: பேயர்ன் மியூனிச் வெற்றி

    – MJ மியூனிச்: ஐரோப்பா சுப்பர் கிண்ணத்தில் நேற்றிரவு பேயர்ன் மியூனிச்-செல்சி அணிகள் மோதின. 2:2 என போட்டியின் மேலதிக நேரம் நிறைவுற்றதால், போட்டியின் முடிவு பெனால்டி உதைகளுக்குச் சென்றது. இதில் 5:4 எனும் பெனால்டி உதை வித்தியாசத்தில் ஜெர்மனியின் முன்னனிக் கழகமான பேயர்ன் மியூனிச் ஐரோப்பா சுப்பர் கிண்ணத்தை முடிசூடிக் கொண்டது.

  • காத்தான்குடி செய்யின் மௌலானா பள்ளிவாயல் புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்…தொழுகைகள் பிரிதொரு இடத்தில்…

    காத்தான்குடி; காத்தான்குடி பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள  பழம்பெரும் மஸ்ஜித் அஸ்ஸெய்யத் செய்யின் மௌலானா பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயலுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால், ஜவேளை தொழுகைகள் வேறு ஒரு இடத்தில் இடம் பெறவுள்ளதாக நிர்வாக சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்

    வெலிவேரிய: வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சித்தம்ம தேரர், பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் இன்று சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பிரதேசத்தில் அந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்குவதை எதிர்த்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • இந்திய இழுவைப்படகுகளினால் பாதிக்கப்படும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு நிரந்தரத்தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி!.

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதால் வடபகுதி கற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அவலங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் கடும் முயற்சியில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருவதாக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் உயர் அரசியல் பீடம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இலட்சிய பயணத்தை மாகாண சபையிலிருந்து ஆரம்பிப்போம்-ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி. தவராசா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் ஊர்காவற்றுறை: தமிழ் மக்கள் அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் போராடியவர்கள், அதனால் அதிகம் இடிந்தவர்கள்.  வலிகளோடும், வடுக்களோடும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உரிமைகளுக்காக போராடி இருந்த உரிமைகளையும், உணர்வுகளையும் இழந்திருக்கின்றோம்.

  • பசீரை கண்டதும் அடங்கிய SLMC முக்கியஸ்தர்கள்

    கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக் கூட்டம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்லாமில் நேற்று (29) இரவு நடைபெற்றது. கட்சியின் தவிசாளர் – அமைச்சர் பஷீர் சேகுதாவூதை கட்சியில் இருந்து விலக்கும் தீர்மானம் ஒன்று தலைவர் ஹக்கீமினால் இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே இப்பரபரப்புக்கு காரணமாகும்.

←Previous Page
1 … 964 965 966 967 968 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar