கடுமையான சட்டங்களின் எதிரொலி: பிரிட்டனுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது

british-flag[1]கொழும்பு: வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் செல்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்விக்காகவும், பணிக்காகவும் பல்வேறு நாட்டினர் பிரிட்டனுக்கு அதிக அளவில் சென்று வந்தனர். இந்நிலையில் விசா கட்டணம் உயர்த்தப்பட்டு சட்டம் கடுமையாக்கப்பட்டதால், சமீப காலமாக அந்த நாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியாவை விட பிரிட்டனுக்கு செல்லும் மாணவர்களுக்ளகு அதிக பணம் செலவிட வேண்டியிருப்பதால் கல்வி கற்க செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் ஹாப்பர், இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது, அதே நேரத்தில் திறமையான ஊழியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விசாக்கள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். LS

Published by

Leave a comment