காத்தான்குடி செய்யின் மௌலானா பள்ளிவாயல் புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்…தொழுகைகள் பிரிதொரு இடத்தில்…

downloadகாத்தான்குடி; காத்தான்குடி பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள  பழம்பெரும் மஸ்ஜித் அஸ்ஸெய்யத் செய்யின் மௌலானா பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயலுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால், ஜவேளை தொழுகைகள் வேறு ஒரு இடத்தில் இடம் பெறவுள்ளதாக நிர்வாக சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான வேலைகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதால் ஐவேளை தொழுகைகள் பள்ளிவாயலுக்கு அருகில்  – ராசா ஆலிம் வீதியில் உள்ள ஓர் இடத்தில்  நடாத்துவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (3௦-8-2013) அஸர் தொழுகை முதல் தற்காலிக இடத்தில் தொழுகை நடைபெறுகின்றமையால் தொழுகைக்காக வருபவர்கள் முடியுமான அளவு தங்கள் வீடுகளில் இருந்து வுழூ செய்துகொண்டு வருவது சிறந்தது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பேஷ் இமாம் .மௌலவி.அல்ஹாஜ்.MAM.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி

zain moulana

Published by

Leave a comment