Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • யாழ் பல்கலைக்கழக பள்ளிவாயல் திறந்து வைப்பு

    கிளிநொச்சி: நீண்ட நாள் அதி முக்கிய தேவையாக இருந்துவந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான பள்ளிவாயல் 27-03-2019ல் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிவாயல் அமைக்கப்பட்டதானது அளப்பெரிய மகிழ்ச்சியைத் தருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பதுடன், இப்பள்ளிவாயல் அமைப்பதற்கு நிதியுதவிகளை வழங்கிய சகோதரர்களுக்கும் தாங்கள் பிரார்த்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

  • அரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரானார் ஜூசானா

    வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பிரேடிஸ்லாவா: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

  • மோட்டார் சைக்கிள் விபத்தில் மஞ்சந்தொடுவாய் அதீப் அகால மரணம்

    வந்தாறுமூலை: வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று மாலை (29) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டக்களப்புமஞ்சந்தொடுவாய், அஷ்-ஷூஹதா வீதியைச் சேர்ந்த முஹம்மத் அதீப் (20) எனும் இளைஞர் அகால மரணமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.

  • காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை GCE O/L 2018 சிறந்த பெறு பேறுகள்

    வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றியோர் 153, உயர்தரத்துக்கு தெரிவானோர்-144, சித்தியடைவு விகிதாசாரத்தில் – 94.11%

  • 9 பாடங்களிலும் A சித்தி – 9,413 பேர் – முதல் 10 இடங்களில் 7 மாணவிகள்!

    கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில், கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி மாணவி, நிலக்னா வருஜவிதான முதலிடத்தை பெற்றுள்ளார்.இரண்டாமிடத்தை மூன்று மாணவிகள் பிடித்துள்ளதோடு, முதல் 10 இடங்களை பிடித்தோரில் 7 மாணவிகளும் 3 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

  • கஞ்சிபானை இம்ரான் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

    ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல  பாதாள உலகத் தலைவனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபானை இம்ரான் எனப்டும் 34 வயதான மொஹம்மட்  நஜீம் மொஹம்மட் இம்ரான் இன்று டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். 

  • ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து

    பொலன்னறுவை: தமது யோசனைக்கமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (25) பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை” மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

  • நாயுடன் குள்ள மனிதன் சண்டையிட்டதை கண்டு அதிர்ச்சி!

    கலகெதர: இலங்கையில் கலகெதர உட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும், அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும்  பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கருணாதிலக் என்ற விவசாயி தனது தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு காவலாக கடந்த பெப்ரவரி 2 ம் திகதியன்று வயல்வெளிக்கு சென்ற சமயத்தில், இளைப்பாறுவதற்காக அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார்.

  • அப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.!

    அப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த புரோசசர் மற்றும் கிரஃபிக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 21.5-இன்ச் ஐமேக் சாதனத்தில் 8-வது தலைமுறை குவாட்-கோர் 6-கோர் புரோசசர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அப்பிள் நிறுவனம்.

  • “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது”

    கிறைஸ்ட்சேர்ச்: நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள இரு பள்ளிவாயல்களில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதியின் தாக்குதல் தொடர்பாக, கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதாகும் பிரெண்டன் டாரண்ட் எனும் நபர் தனியாக திட்டம் தீட்டியதாக நியூசிலாந்து காவல்துறையினர் நம்புகின்றனர்.மேலும் அவருடன் கைதான மூவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பில்லை எனத் தோன்றுவதாக கிறைஸ்ட்சேர்ச் நகர காவல் ஆணையர் மைக் புஷ் கூறியுள்ளார். தம்மை வெள்ளை இனவாதியாகக் கூறிக்கொள்ளும் அந்த நபர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக்…

  • “இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும்”

    நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.  இந்த தாக்குதல் இரண்டு மசூதிகளில் நடைபெற்றது.

  • ஒக்ஸ்போர்ட் சட்ட விவாத இறுதிச் சுற்றுக்கு இல்ஹாம் நிஸாம் காரியப்பர் தெரிவு

    – அஸ்லம் எஸ்.மௌலானா உலகின் தலைசிறந்த சட்டப் பல்கலைக்கழகமான லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தினால் சர்வதேச மட்டத்தில் வருடாந்தம் நடாத்தப்படும் சட்ட விவாத போட்டியின் இறுதிச் சுற்றில் பங்குபற்றுவதற்கு, சுமார் 11 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது. இதற்காக இலங்கை சட்டக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி இல்ஹாம் நிஸாம் காரியப்பர் எனும் மாணவனும் ஷெனூன் ஹார்டி எனும் மாணவியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

←Previous Page
1 … 76 77 78 79 80 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar