வந்தாறுமூலை: வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று மாலை (29) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டக்களப்புமஞ்சந்தொடுவாய், அஷ்-ஷூஹதா வீதியைச் சேர்ந்த முஹம்மத் அதீப் (20) எனும் இளைஞர் அகால மரணமானார்.
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.
பாசிக்குடாவுக்குச் சென்று காத்தான்குடி நோக்கி வந்தவேளை வந்தாறுமூலை, அம்பலத்தடியில் இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் மோதி இரு மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்த நிலையில் மூவர் பரிதாபகமாக அகால மரணமடைந்தனர்.
முஹம்மத் அதீப்
காத்தான்குடியைச் சேர்ந்த மற்றுமொருவர் எரிகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.