அப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த புரோசசர் மற்றும் கிரஃபிக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 21.5-இன்ச் ஐமேக் சாதனத்தில் 8-வது தலைமுறை குவாட்-கோர் 6-கோர் புரோசசர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அப்பிள் நிறுவனம்.
மேலும் முந்தைய ஐமேக் மொடல்களை விட 60சதவிகிதம் வேகமாக இயங்கும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 21.5-இன்ச் ஐமேக் சாதனம். குறிப்பாக ரேடியான் ப்ரோ வீகா 48 கிராஃபிக்ஸ் என்ற அமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு 27-இன்ச் ஐமேக் மொடலில் 9-ம் தலைமுறை 6-கோர் மற்றும் 8-கோர் இன்டெல் கோர் ஐ9 புரோசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 27-இன்ச் ஐமேக் சாதனத்தில் ப்ரோ வீகா கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மொடல்களை விட 50% வேகமாக இயங்கும் குறிப்பாக 21.5-இன்ச் மற்றும் 27-இன்ச் ஐமேக் சாதனங்களில் ரெட்டினா 5K மற்றும் ரெட்டினா 4K வசதி, பின்பு 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் (P3) வழங்கப்பட்டுள்ளது.