Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘மாயமான மலேசிய விமானம் வங்காள விரிகுடாவில் வீழ்ந்த தகவல் தவறானது’

    – SHM சிட்னி: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக அவுஸ்திரேலிய கடல் ஆய்வு நிறுவனம் கூறியதை ஏற்க விமானத் தேடல் குழு மறுத்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஜியோரெசொனன்ஸ் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் போன்று வங்காள விரிகுடாவில் பார்த்ததாக அறிவித்தது.

  • சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

    லண்டன்: நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

  • அடோல்ப் ஹிட்லர்

    ஹிட்லரும் அவரது மனைவியும் மரணித்த ஏப்ரல் 30, 1945, உலக வரலாற்றில் பதியப்பட்ட நாள். கடந்த வருடங்களில் இதே நாளில் பிரசுரிக்கப்பட்ட இவ் ஆக்கம், எமது வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

  • இலங்கை – பஹ்ரைனுக்கிடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

    மனாமா: இலங்கைக்கும் பஹ்ரைனுக்கு மிடையிலான நல்லுறவு மற்றும் தொடர்புகளைப் பலப்படுத்தும் வகையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

  • மேதினம்: நாடெங்கும் விரிவான ஏற்பாடுகள் கொழும்பில் 15 ஊர்வலங்கள்; 17 கூட்டங்கள்

    கொழும்பு: உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இம்முறை கொழும்பு நகரில் 17 கூட்டங்களும் 15 மேதின ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

  • நான்கு பெண்கள்,  முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி முத்தமிட்ட போப்

    – S-90 வத்திகான்: வத்திக்கானில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நான்கு பெண்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி போப் பிரான்சிஸ் முத்தமிட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவர்களின் நம்பிக்கைபடி சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று கூறுகின்றனர்.

  • “எந்தத் தீர்வையும் எமக்கு இதுவரை எவரும் வழங்கவில்லை” – மறிச்சிக்கட்டி மக்கள்

    – PMGG ஊடகப் பிரிவு மன்னார்: மன்னார் மறிச்சிக்கட்டி, மரைக்கார் தீவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் செய்தியில் எந்த விதமான உண்மையும் கிடையாது என அக்கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மௌலவி மஹ்மூத் தௌபீக் தெரிவித்தார்.

  • காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரசன்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்றார்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டரை வருட காலமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் பி.எல் அஜித் பிரசன்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்று முதல் தடவையாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருவதை வரவேற்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவின் புதிய காரியாலத்தில் 28-04-2014 நேற்று திங்கட்கிழமை…

  • முகம்மது நிஸார் ஆசிரியர் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பிரதேசத்தில் தக்வா பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் முகம்மது சரிபு முகம்மது நிஸார் ஆசிரியர் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் 29-04-2014 இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

  • ஏறாவூர் மக்களுக்கு வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு விஷேட செயற்திட்டம்

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்ச்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவகளிடம் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏறாவூர் மக்களுக்கான வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு விஷேட செயற்திட்டம் சென்ற வியாழக்கிழமை ஏறாவூர், ஐயங்கேனி மீள் எழுச்சிக் கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.

  • இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான்- கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்தார்

    பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணாமலை: சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸானுக்கும், கிழக்குமாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று 28.04.2014 இன்று திங்கட்கிழமை காலை திருகோணாமலையிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • எனது பார்வையில்…. இடம்பெறவிருக்கும் பிரித்தானியவாழ் முஸ்லிம்களின் ‘லண்டன் ஆர்ப்பாட்டம்’

    – ராஜரட்ணம் லண்டன்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பொதுபலசேனா எனும் சிங்கள அமைப்புக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பிரித்தானியவாழ் முஸ்லிம்களுக்கிடையில்

←Previous Page
1 … 774 775 776 777 778 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar