ஏறாவூர்: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்ச்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவகளிடம் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏறாவூர் மக்களுக்கான வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு விஷேட செயற்திட்டம் சென்ற வியாழக்கிழமை ஏறாவூர், ஐயங்கேனி மீள் எழுச்சிக் கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுகள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் தலமையில் மேற்படி அமைச்சின் பணிப்பாளர் திரு ரணவீர, பிரதி பணிப்பாளர் அல்ஹாஜ் வீ.யூசுப், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்..ஹனிபா, அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
இவ் விஷேட செயற்திட்டதில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழில் முயற்ட்சியாளர்கள் பங்கு கொண்டனர். தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய கைத்தொழில் மன்றம், தேசிய பனை அபிவிருத்தி சபை ஆகிய நிருவனங்களும் இந்நிகழ்வில் பங்கு கொண்டு, உடனடியாக நேர்முகத் தேர்வுகளையும் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ். சுபைர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நடாத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by

Leave a comment