WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி நபர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு தீக்கிரை

    – பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி நபர்களுக்கு சொந்தமான இரண்டு மீன்பிடி படகு 21 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

  • இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு

    இன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, நேற்று (21) பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  • இரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை இரத்த வங்கிக்கு வழங்கி வைப்பு-தற்போது இரத்தம் தட்டுப்பாடு இல்லை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.

  • “கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது”

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. கோத்தபாய ராஜபக்ஷ அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையானது, அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் என்பதற்கு இன்னமும் அதிக வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.

  • ‘மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்’ அமைக்க நிதி உதவி கோரல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கி வரும் சம்மேளன நலன்புரி அமைப்பானது காத்தான்குடி பிரதேசத்தில் நேர்வழியை நாடிவரும் சகோதர,சகோதரிகளுக்கான பராமரிப்பு,மார்க்க,கல்வி ரீதியான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை மிக நீண்ட காலமாக வழங்கி வருவதோடு மட்டுமன்றி மேற்படி அமைப்பின் கண்காணிப்பில் இதுவரை கணிசமான சகோதர,சகோதரிகளுக்கு சன்மார்க்க பயிற்சி மற்றும் வாழ்வாதார,வதிவிட,பொருளாதார ரீதியான உதவிகளையும்; வழங்கி வருகின்றன.

  • லண்டன் லூடன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது !

    சர்வதேச விமானமொன்றின் மூலம் இலங்கையர்கள் நால்வரும் லண்டனின் லூடன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு வந்திறங்கிய நிலையில் அவர்கள் நால்வரும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பான சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பயங்கரவாதச் சட்டத்திற்கமைய தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என பிரித்தானிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

  • மாகாணசபைத் தேர்தல்: விகிதாசார முறையில் நடத்துவதாக இருந்தால் ஐ.தே.க தயார்

    கொழும்பு: பழைய விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் எந்த நேரத்திலும் அதனை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது என சபை முதல்வரும் தேசிய மரபுரிமைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறையை பின்பற்றுவதில் சிக்கல் உருவாகியுள்ளதால் பழைய முறையில் நடத்துவது தான் சரியானது எனவும் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், மாகாண எல்லை நிர்ணய பணிகள் மறுசீரமைக்கப்படவேண்டும்.

  • ஷஃபான் மாதத்தின் சிறப்பு

    உஸாமா இப்னு ஸைத் (ரலியள்ளாஹு அன்ஹு) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின்தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்புநோற்பதை நான் காணவில்லையே என்று வினவிய போது,நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மாதம் விஷயத்தில் (அதன் சிறப்பை உணராது) அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின் பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட…

  • “இது எனது வஸிய்யத்” எனும் தலைப்பில் அப்துர் ரஊப் மௌலவி வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்

     – நமது நிருபர் காத்தான்குடி: தனது “எல்லாம் அவனே” கொள்கையை கடைப்பிடித்துவரும் முரீதீன்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் எனது வஸிய்யத் எனும் தலைப்பில் ஓர் மஞ்சல் துண்டுப்பிரசுரத்தை கடந்த 06-04-2019 இல் வெளியிட்டிருந்தார். இத்துண்டுப்பிரசுரத்தை தனது ஆதரவாளர்களுக்காகவே அவர் வடிவமைத்துள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த

    கொழும்பு: இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை செவ்வாய்க்கிழமை (2) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  • காத்தான்குடியில் சிகரத்தை எட்டும் காணி விலைகள்

    இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: காத்தான்குடியில் இடைத்தரகர்களின் போட்டித்தன்மையின் விளைவால் 10 இலட்சத்துக்கும் பெறுமதியில்லாத காணிகள்கூட 3 கோடிகளைத் தாண்டும் பரிதாபம் ஏற்பட்டிருக்கிறது. ஓர் காலத்தில் அதி மிஞ்சிய செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் ஓர் அடித்துண்டொன்றையும் விட்டுவிடாமல் அடித்துப்பிடித்த, வளைத்துப்பிடித்த, வாங்கிப் போட்ட காணிகளைத்தவிர, சாதாரண மக்களால் அவசரத்தேவைக்கு விற்கப்படும் வீடு, வெற்றுக்காணிகள் கொள்ளை விலையில் பேரம் பேசப்படுகின்றன.

  • போதைப் பொருளுக்கு எதிராக “சத்தியப்பிரமானம்” செய்யவேண்டும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

    (ஊடகப்பிரிவு)  எதிர் வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் “போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்” என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

←Previous Page
1 … 75 76 77 78 79 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar