-
இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: காத்தான்குடியில் இடைத்தரகர்களின் போட்டித்தன்மையின் விளைவால் 10 இலட்சத்துக்கும் பெறுமதியில்லாத காணிகள்கூட 3 கோடிகளைத் தாண்டும் பரிதாபம் ஏற்பட்டிருக்கிறது. ஓர் காலத்தில் அதி மிஞ்சிய செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் ஓர் அடித்துண்டொன்றையும் விட்டுவிடாமல் அடித்துப்பிடித்த, வளைத்துப்பிடித்த, வாங்கிப் போட்ட காணிகளைத்தவிர, சாதாரண மக்களால் அவசரத்தேவைக்கு விற்கப்படும் வீடு, வெற்றுக்காணிகள் கொள்ளை விலையில் பேரம் பேசப்படுகின்றன.
ஓர் நாட்டின் தலைநகரத்தில் விற்கப்படும் காணிகள் போன்று அதற்கான விலைகளும், விளம்பரங்களும் இடைத்தரகர்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றன.
ஓர் குமருக்கு வீடு கட்டுவதற்கு காணியைத் தேடினால் காணி மாத்திரம் குறைந்தது ஒரு கோடிக்கு மேல் விலை அடிக்கப்படுகிறது.
இடைத் தரகர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.