இலங்கை-இங்கிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி இன்று

englandகொழும்பு: இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து தொடரில் பங்குபெறவுள்ள இல ங்கை வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட்டால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று முதல் ஆரம்பித்து டிசம்பர் 16ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 2011ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிராத திலின கந்தம்பி இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி இந்திய சுற்றுத் தொடரில் 5-0 என தோல்வி கண்ட நிலையில் இந்த தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை அணி சர்வதேச தரவரிசையில் நான்காமிடத்தில் உள்ளது. அதனால் தர வரிசையில் முன்னேறுவதற்கான வாய்ப்பாகவும் தொடரை எடுத்துக்கொள்ளவும் இது உதவியாக அமையும் எனவும் இலங்கை அணித் தலைவர் மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.

england

இரு அணிகளும் பலத்த எதிர்பாப்புடன் இந்த 7 ஒருநாள் ஆட்டங்களில் களமிறங்குகின்றன. இலங்கை அணியைப் பொறுத்தவரையில் தனது சொந்த மண்ணில் ஆடுவதால் வெற்றியை தங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என்றும் அவ்வணியினர் எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றனர். மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவிற்கு பதிலாக ‘மிந்த ஏரங்க சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர, சகலதுறை ஆட்ட வீரர் ஜீவன் மென்டிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டில்ருவான் பெரேரா ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அதே வேளை, சீக்குகே பிரசன்ன மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சகல பாகங்களிலும் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இப்போட்டிகள் எத்தகைய முடிவுகளைத் தரப்போகின்றன என்பதை பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.

Published by

Leave a comment