Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்ப வேண்டும்’: மைத்திரி

    கொழும்பு: இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்பவேண்டும் என்றும் புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  • கிழக்கு மாகாணசபையிலும் ஆட்சி மாற்றமா?

    கொழும்பு: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய அறிகுறிகள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன.

  • தன் வினை தன்னைச் சுடும்

    கொழும்பு: மகிந்த ராஜபக்ஷ தனது பலமிக்க அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தின்படி வருடாந்தம் ஒதுக்கப்படும் 27 கோடி ரூபா நிதியை கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 6 கோடி ரூபாவாக குறைத்தார். நிதியை குறைத்து சந்திரிக்காவுக்கு மனவலியை ஏற்படுத்தி விட்டு, தனது ஒரு நாள் செலவுக்கு 2.5 கோடி ரூபாவை ஒதுக்கினார்.

  • யார் இந்த மைத்திரி?

    பிறப்பு : 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி : பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி. உயர்கல்வி : ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமா பட்டம்

  • ‘தேர்தல் வெற்றியும் நாங்களும்’ NFGGயின் விஷேட மக்கள் சந்திப்பில் மக்கள் வெள்ளம்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நடைபெற்று முடிந்த ஜானாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ‘தேர்தல் வெற்றியும் நாங்களும்’ எனும் தலைப்பில் விஷேட மக்கள் சந்திப்பு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தது.

  • பொது வேட்பாளர் மைத்திரியை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி நவிலும் நிகழ்வு

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்காக காத்தான்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஜாமியுழாபிரின் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • புத்தளத்தில் மைத்திரி ஆதரவாளரின் வீட்டின் மீது தாக்குதல்!

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் புத்தளம்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கு புத்தளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம்.எம். ஆசாத் என்பவரின் நோர்த் ரோட் பகுதியில் அமைந்துள்ள  வீட்டின் மீது இன்று அதிகாலை, கும்பலொன்று நடத்திய தாக்குதலினால் அவரின் வீட்டு ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவரது 6 வயது நிரம்பிய குழந்தையொன்றும் வெட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.

  • மஹிந்த ராஜபக்ஸ வெளியேறவில்லை: வெளியேற்றப்பட்டார்

    – AK-77 கொழும்பு: நேற்று வெளியாகிக்கொண்டிருந்த தேர்தல் முடிவுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்வி உறுதியாகிவிட்டதை தாங்க முடியாமல், மஹிந்த தரப்பினர் இராணுவத்தை வைத்து தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தை இராணுவத்தைக்கொண்டு தாக்கி, பெறுபேறுகளை இடைநிறுத்தி, ஓர் புரட்சியை மேற்கொள்ள திட்டம் வகுத்திருந்தது.

  • பரிஸ் சூப்பர் மார்க்கெட் முற்றுகை: ‘ஆயுததாரியும் 4 பணயக் கைதிகளும் பலி’

    பரிஸ்: பரிஸில் ‘ஷார்லி எப்தோ’ சஞ்சிகையின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆயுததாரிகளும் பிரான்சின் வடமத்திய பிராந்தியத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், கிழக்கு பரிஸிலும் வென்சென் பகுதியில் உள்ள யூத சூப்பர் மார்க்கெட்டுக்குள் பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

  • ‘வடக்கு- கிழக்கு, மலையக வாக்குகளிலேயே தோற்றுள்ளேன்’: மகிந்த

    ஹம்பாந்தோட்டை: வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் மற்றும் மலையகத் தோட்டப் பிரதேசங்களிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மற்றபடி, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் மக்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

  • நாட்டடின் சட்டம், ஓழுங்கு, மக்களது அபிலாஷைகள் என்பனவற்றை மதித்து எனது பணியினை முன்னெடுக்கவுள்ளேன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: நேற்று இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்  எனக்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இன்று 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் சத்தியப் பிரமானம் செய்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.

  • சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் இத்தோ்தல் அவா்களுக்கு ஒரு பாடமாக அமையும் – ஹரீஸ் எம்.பி

    ஹாசிப் யாஸீன் திகாமடுல்ல: தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்  தக்க தருணத்தில் எடுத்த முடிவும் பெரும்பான்மை மக்களின் நடுநிலை முடிவும் இந்த நாட்டில் நிரந்தர அமைதி சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டின் ஸ்திரத் தன்மையை பாதுகாக்கும் என திகாமடுல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

←Previous Page
1 … 559 560 561 562 563 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar