பொது வேட்பாளர் மைத்திரியை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி நவிலும் நிகழ்வு

unnamed2NFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்காக காத்தான்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஜாமியுழாபிரின் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ULMN. முபீன் (BA), ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் காத்தான்குடி அமைப்பாளர் HMM. முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment