‘தேர்தல் வெற்றியும் நாங்களும்’ NFGGயின் விஷேட மக்கள் சந்திப்பில் மக்கள் வெள்ளம்

unnamed6NFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: நடைபெற்று முடிந்த ஜானாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ‘தேர்தல் வெற்றியும் நாங்களும்’ எனும் தலைப்பில் விஷேட மக்கள் சந்திப்பு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் MACM. ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி, தலைமைத்துவ சபை உறுப்பினர் டாக்டர் ILM. றிபாஸ் (MBBS) ஆகியோருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளும் உரையாற்றியதுடன் ஓட்டமாவடி, ஏறாவூர், மருதமுனை, பொத்துவில் பிரதேச நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர்களும் மேலும் பலரும் உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment