காத்தான்குடி: அஸாபீருல் ஜன்னாஹ் அல்குர்ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் 3வது சான்றிதழ் வழங்கும் விழாவும் புதிய மாணவர்களை வரவேற்றலும் 17-01-2015 இன்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அஸாபீருல் ஜன்னாஹ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். அன்சார் (மக்கி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் கலந்து கொண்டார்.
இதன் போது அதிதிகளினால் 2014ஆம் ஆண்டு அல்குர்ஆனை ஓதி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் 2015ஆம் ஆண்டு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள் பழைய மாணவர்களினால் வரவேற்க்கப்பட்டனர்.
இங்கு விஷேட உரையை மஃஹதுஸ்ஸூன்னா அன்னபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மன்சூர் (மதனி) நிகழ்த்தினார்.
இதில் அஸாபீருல் ஜன்னாஹ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு இஸ்லாமிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச். ஜிப்ரி மதனி, காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் தலைவர் எம்.ஐ. முஹம்மத் ஜே.பி அதன் செயலாளர் ஏ.எம்.எம். மிஹ்லார், காத்தான்குடி குர்ஆன் மத்தரசாக்கள் அபிவிருத்தி சபையின் பரிசோதகர் மௌலவி எச்.எம்.எம். ஷாஜஹான் (பலாஹி), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். முனீர் (நழீமி), அல்மனார் அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பீ.எம். அன்சார் (மதனி), காத்தான்குடி லஜினதுஸ்ஸூன்னா அன்னபவிய்யாவின் செயலாளர் ஏ.ஏ.எம். ஆரிஸ் (மதனி) உட்பட உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment