‘உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்’ யூனிஸ்கான்

younis khanலாஹூர்: 1975-ம் ஆண்டு உலகக்க்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமான நாளிலிருந்து உலகக்கிண்ணப் போட்டியில் இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதாக வரலாறு கிடையாது. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘வரலாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த முறை நாங்கள் அடிலெய்டில் நடக்கும் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்வோம். விதியை மாற்றுவோம்.

அண்மையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் நான் ஆடியபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதே ஆச்சர்யம் இந்த உலக்கோப்பையிலும் இரசிகர்களிடம் எழும். நல்ல ‘ஃபோர்’மில் உள்ள வீரர்கள் நிறைய பேர் எங்கள் அணியில் இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் திறமையாகவும், பொறுப்பாகவும் விளையாடினால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்தி விடலாம்.

Published by

Leave a comment